PUBLISHED ON : ஜன 26, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
மூழ்காத தாவரங்கள்
அனைத்து தாவரங்களின் வளர்ச்சிக்கும் நீர் தேவை. ஆனால் நீர் தேவைக்கு அதிகமாக இருந்தால் இவற்றின் வளர்ச்சி தடைபடும். ஆனால் தாமரை, ஆம்பல், கம்மல் செடி போன்றவை எப்போதும் நீர், ஈரப்பாங்கு உள்ள இடங்களில் வளரும். இவை நீர்வாழ்த் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் ஒரு பகுதியோ, முற்றிலுமோ கடல்நீர் அல்லது நன்னீரில் மூழ்கி வாழும். காற்றைச் சுவாசித்து வாழும் விலங்குகளுக்குக் காற்று எப்படி அத்தியாவசியமோ, அதுபோல இவ்வகைத் தாவரங்களுக்கு நீர் அவசியம். இதில் சில தாவரங்கள் நீரின் மேல் வரை உயர்ந்து வளரும்.
தகவல் சுரங்கம்
உலக சுங்கத்துறை தினம்
உலக சுங்கத்துறை நிறுவனம் 1952 ஜன. 26ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் 183 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் நகரில் உள்ளது. அனைத்து நாடுகளிலும் சுங்கத் துறை உள்ளது. இத்துறை அதிகாரிகளின் சேவை முக்கியமானது. போதைப்பொருள், தங்கம் உட்பட சட்ட விரோதமான கடத்தலை தடுப்பது, சுற்றுச்சூழலை பாதுகாத்தல் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இவர்களை பாராட்டும் விதமாக ஜன. 26ல் சுங்கத்துறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

