/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
மாநகராட்சி பில் கலெக்டர்கள் 12 பேர் பணியிட மாற்றம்
/
மாநகராட்சி பில் கலெக்டர்கள் 12 பேர் பணியிட மாற்றம்
மாநகராட்சி பில் கலெக்டர்கள் 12 பேர் பணியிட மாற்றம்
மாநகராட்சி பில் கலெக்டர்கள் 12 பேர் பணியிட மாற்றம்
PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், பில் கலெக்டர்கள் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின்கீழ், 51 வார்டுகள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களின் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை வரி கட்டணங்களை வசூல் செய்யவும், புதிய வரியை விதிக்கவும், சொத்து வரியை மறு ஆய்வு செய்யவும் என, பல்வேறு பணிகளுக்கு, பில் கலெக்டர்கள் எனப்படும் வரி வசூலிப்பாளர்கள் 13 பேர் பணியில் உள்ளனர்.
பில் கலெக்டர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், வரி விதிப்பு செய்வது சம்பந்தமாக, கட்டட உரிமையாளர்களிடம் பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் உள்ளன.
ஏற்கனவே, பெண் பில் கலெக்டர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கினார்.
பில் கலெக்டர்கள் மீது கவுன்சிலர்களும் பல புகார்களை மாநகராட்சி வருவாய் துறையில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மாநகராட்சி கூட்டத்திலும் தெரிவித்தனர்.
மேயர் மகாலட்சுமியும், பில் கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய கடிதம் கொடுத்திருப்பதாக, மாநகராட்சி கூட்டத்திலேயே தெரிவித்திருந்தார்.
ஆனால், பல ஆண்டுகளாக பணியிட மாற்றம் செய்யப்படாமலேயே, இருந்தனர்.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் கடந்த 9ம் தேதி வெளியானதையடுத்து, மாநகராட்சிக்கான கூடுதல் பொறுப்பு கமிஷனர் சசிகலா, பில் கலெக்டர்கள் 12 பேரை, இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட வார்டுகளில் இருந்து மாற்றம் செய்து, புதிய வார்டுகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
மீதமுள்ள ஒரு பில் கலெக்டர் மட்டும், காசாளராக தொடர்ந்து பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.