PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் இருந்தது.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் பழுதை சரி செய்ததை தொடர்ந்து உயர்கோபுர மின்விளக்கு ‛பளீச்' என ஒளிர்கிறது.