/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
விரும்பும் இடங்களுக்கு சிறை காவலர்கள் இடமாறுதல்
/
விரும்பும் இடங்களுக்கு சிறை காவலர்கள் இடமாறுதல்
PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:தமிழக சிறைகளில் மொத்தம் மொத்தமாக உதவி ஜெயிலர்கள், தலைமை காவலர்கள் இடம் மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது.
அதன் எதிரொலியாக, இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடங்களுக்கு இடமாறுதல் அளிக்க டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்த மத்திய சிறையில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்களிடம் விருப்ப இடங்கள் பெற்று, அதில் ஒன்றுக்கு அவர்களை இடம் மாற்ற, கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.