Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி: தி.மு.க., தான் காங்கிரஸ் மிரட்டலுக்கு பணிந்தது என்றும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது என்றும் பேசியிருக்கிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. 2004 - 2014ம் ஆண்டு வரை, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோது, தமிழகத்திற்கு தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பா.ஜ.,-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?-

டவுட் தனபாலு: கடந்த 2011 சட்டசபை தேர்தலில், உங்க கட்சி தலைமையை மிரட்டி, 63 சட்டசபை தொகுதிகளை காங்கிரஸ் வாங்கியதையும், அந்த தேர்தலில் தோற்றதும், 'கூடா நட்பு கேடாய் முடிந்தது'ன்னு உங்க தலைவர் கருணாநிதி புலம்பியதையும் நீங்களும் மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன். பிரதமர்கள் வி.பி.சிங், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய கேபினட் அமைச்சர் பதவி தருவதாக வலியுறுத்தினர். ஆனால், நான் மத்திய அமைச்சராக விரும்பவில்லை. அதனால், என் கட்சிக்கு இரு இணை அமைச்சர் பதவி அளித்தனர்.

டவுட் தனபாலு: பதவி மீது உங்களுக்கு ஆசையில்லாம, 'கிங் மேக்கரா' இருந்து, உங்க கட்சியின் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரனை மத்திய இணை அமைச்சர்கள் ஆக்குனீங்க... ஆனா, இன்று கண்ணப்பன் தி.மு.க.,விலும், செஞ்சி ராமச்சந்திரன் அ.தி.மு.க.,விலும் இருக்காங்க... இதனால, வெறுத்துப் போய்தான் துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்தீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ்: கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க., தேர்தலை சந்தித்தது. அந்த காலகட்டத்தில், தே.மு.தி.க.,வுக்கு ஒரு லோக்சபா தொகுதியுடன், ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர். ஆனால், உறுதி அளித்தபடி நடந்து கொள்ளவில்லை. ஆனால், அப்படி எதுவும் பேசப்படவில்லை என்பது போல், இப்போது தகவல் பரப்புகின்றனர்.

டவுட் தனபாலு: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'சீட்' பங்கீடு ஒப்பந்தம் போடுறப்ப, ராஜ்யசபா சீட்டுக்கும் சேர்த்து எழுதி வாங்கிட்டுதான் கூட்டணியை, 'ஓகே' பண்ணுவார்... நீங்க எழுதி வாங்காம இருந்துட்டு, இப்ப புலம்புவதில் ஏதாவது புண்ணியம் இருக்கா என்ற, 'டவுட்'தான் வருது!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us