தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 11, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2026 01:54 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க., நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: அ.தி.மு.க., என்பது தே.ஜ., கூட்டணியில் உள்ள, 10 கட்சிகளில் ஒன்று. அதனால், அ.தி.மு.க., என்பது ஒரு கட்சியே இல்லை. த.வெ.க., சார்பில் தேர்தலில் போட்டியிட, ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு வாங்கியுள்ளனர்; 15,000 பேர், மனு கிடைக்காமல் திரும்பி சென்றனர்.

டவுட் தனபாலு: அது சரி... சினிமா டிக்கெட் மாதிரி ஒரு விருப்ப மனு, 100 ரூபாய்னு சொன்னதும், எல்லாரும் சுண்டல் மாதிரி வாங்கிட்டு போயிட்டாங்க... வாங்கிட்டு போனவங்கள்ல எத்தனை பேர், 10,000 ரூபாய் கட்டி விண்ணப்பிக்கிறாங்க என்பதை பார்த்த பிறகுதான், உங்க கட்சியின் நிஜமான பலம் தெரியவரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர்: கடந்த 2016ல், இந்திய ஜனநாயக கட்சியின் மூன்றாவது மாநாடு, விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடாக நடந்தது. மாநாடு சிறப்பாக அமைந்திருந்ததாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், முன்னாள் எம்.பி., இளவரசன் கூறியுள்ளார். 'பாரிவேந்தரை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வர வேண்டும்; அவரை விட்டு விடாதீர்கள்; சட்டசபை தேர்தலில், நான்கு அல்லது ஐந்து சீட் தரத் தயாராக இருக்கிறேன்' என்று ஜெயலலிதா கூறியதாக இளவரசன் கூறினார்.

டவுட் தனபாலு: 'அப்பவே எங்க கட்சிக்கு ஐந்து சீட்கள் தர ஜெ., தயாரா இருந்தாங்க... அதனால, பழனிசாமி அதைவிட அதிகமா தரணும்'னு நாசுக்கா கேட்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது... ஒருவேளை பழனிசாமி அஞ்சாறு சீட்களை தந்துட்டாலும், வேட்பாளர்களுக்கு எங்க போவீங்க என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருதே!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: காங்கிரசில் ஒரு பிரிவினர், த.வெ.க.,வுடன் கூட்டணி சேர விரும்புகின்றனர். இதனாலேயே, 1996ல் ஏற்பட்ட பிளவு போல, மீண்டும் காங்கிரசில் பிளவு ஏற்படும் என்று சொல்கின்றனர். சமீபத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி டில்லி சென்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை சந்தித்து பேசியும், கூட்டணியில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடன் பேச காங்கிரஸ் குழு அமைத்தும், தி.மு.க., குழு அமைக்காமல், காங்.,கை அவமானப்படுத்தி வருகிறது.

டவுட் தனபாலு: தி.மு.க., அவமதிப்பதை பத்தி, காங்கிரசாரே கவலைப்படலை... அவங்களுக்காக இவர் ஏன் வக்காலத்து வாங்குறாரு... காங்கிரசாரை உசுப்பேத்தி, த.வெ.க., பக்கம் திருப்பிவிட்டு, தி.மு.க., அணியை பலவீனப்படுத்த காய் நகர்த்துறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us