Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

4


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம்: பிரசித்தி பெற்ற கோவில்களில், உள்ளூர் மக்களை சிறப்பு வழியில் தரிசிக்க அனுமதிக்காமல், தி.மு.க., அரசு தடுப்பு வேலி அமைக்கிறது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடாமல் ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியது. ஆன்மிகத்திற்கு எதிரான, தி.மு.க., அரசை மக்கள் துாக்கி வீசுவர்.

டவுட் தனபாலு: ஹிந்துக்கள் மனதை தி.மு.க., புண்படுத்தியது, சிறுபான்மையினரான உங்களுக்கே வேதனையை தருது... ஆனா, பெரும்பாலான ஹிந்துக்களுக்கு அந்த உணர்வு இல்லாம போனதால தான், 'திராவிட மாடல்' ஆட்சியின் வண்டி அலுங்காம, குலுங்காம தமிழகத்தில் ஓடிட்டு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!

தமிழக துணை முதல்வர் உதயநிதி: தமிழகம் முழுதும் ஐந்தாண்டுகளில் எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி, 2,000 ரூபாய் தருவோம். மீண்டும் ஆட்சியமைத்ததும், அனைத்து மகளிர் கைகளிலும், 8,000 ரூபாய் கூப்பன் கொடுத்து விடுவோம். அவர்கள், வீட்டுக்கு என்ன மின்சாதன பொருட்கள் தேவையோ, அதை வாங்கிக்கலாம்.

டவுட் தனபாலு: கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களை செய்திருந்தால், அதுக்காகவே மக்கள் உங்களுக்கு மறுபடியும் ஓட்டு போடுவாங்களே... பிறகு ஏன், இதுபோன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தரணும்... நீங்க செய்த திட்டங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது!

பத்திரிகை செய்தி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். இதை பயன்படுத்தி, சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதி கேட்டனர்; ஆனால், தி.மு.க., மறுத்து விட்டது. ஆனாலும், வரும் 20, 21ம் தேதிகளில் சென்னை வரும் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

டவுட் தனபாலு: டில்லியிலும், பஞ்சாபிலும் தேசிய கட்சி யான காங்கிரசை கடுமையாக எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி அரசியல் பண்ணுது... அப்படியிருக்கிறப்ப, தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டு கேட்பாரா அல்லது தி.மு.க.,வுக்கு மட்டும் ஓட்டு கேட்டுட்டு பறந்துடுவாரா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap