Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : மே 05, 2026 12:34 AM

Follow on Google

PUBLISHED ON : மே 05, 2026 12:34 AM

4


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகில இந்திய காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் நிக்கோபர் பயணத்திற்கு பின், மத்திய அரசு நிலைகுலைந்து போய் உள்ளது. இதன் விளைவாக, 'கிரேட் நிக்கோபர்' திட்டம் குறித்து மத்திய பா.ஜ., அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில்கள் இடம்பெறவில்லை. இது பற்றி பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: அது சரி... பார்லிமென்டை கூட்டினாலும், அங்க வந்து ராகுலோ, உங்க கட்சியினரோ ஆக்கபூர்வமான வாதங்களை முன்வச்சிடுவீங்களா... வீண் கூச்சல், குழப்பத்துல ஈடுபட்டு, பார்லிமென்டை ஒத்திவைக்கதான் பாடுபடுவீங்க... இதனால, மக்கள் வரிப்பணம் தான் வீணாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ்: கேரள ரசிகர்களுக்கு விஜய் எப்போதும் அண்ணன் தான். மோகன்லால், மம்மூட்டி கூட, விஜய் படங்கள் இங்கு வெளிவரும்போது, தங்கள் படங்கள் வெளியிடுவதை தவிர்க்கின்றனர். கேரளாவில் உள்ள ரசிகர்கள், விஜயை ஒரு அண்ணனை போலவே கொண்டாடுகின்றனர்.

டவுட் தனபாலு: கேரளாவிலும், ஆந்திராவிலும் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க என்பது உண்மை தான்... புதுசா ஆட்சிக்கு வந்திருக்கும் விஜய், இதை பயன்படுத்தி அண்டை மாநிலங்களுடன் நமக்கு இருக்கும் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்கணும்... அப்படி செய்தால், விஜயின் செல்வாக்கு இன்னும் உயரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



பத்திரிகை செய்தி: தி.மு.க., மீண்டும் வெற்றி பெறும் என கருதியிருந்த அக்கட்சி நிர்வாகிகள், கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் வெற்றி பந்தல் அமைத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், தி.மு.க., தோல்வி முகம் கண்டு, அது வெற்று பந்தலாக மாறியதால், உடனடியாக அதை அவிழ்த்து விட்டனர். மேலும், 10,000 வாலா பட்டாசுகள், இனிப்புகள் சகிதம் காத்திருந்த நிர்வாகிகளும் சத்தமின்றி இடத்தை காலி செய்தனர்.

டவுட் தனபாலு: தேர்தலில் தாங்கள் அள்ளிவிட்ட பணமழை தங்களை எப்படியும் கரை சேர்த்துடும்னு வாக்காளர்கள் மீது அபார நம்பிக்கையுடன் இருந்திருப்பாங்க... ஆனா, யானை காதில் புகுந்த கட்டெறும்பு கதையாக விஜய் கட்சியால, தங்களுக்கு இந்த அளவுக்கு சேதாரம் ஆகும் என்பதை தி.மு.க.,வினர் கனவில் கூட நினைச்சிருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap