Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

3


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: முதல்வராக பதவியேற்றுள்ள த.வெ.க., தலைவர் விஜய், வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்களிடம் சிறிது அவகாசம் கேட்டுள்ளார். அதனால், அவருக்கு உரிய நேரத்தை தருவோம். அதன்பின், எங்கள் குரலை சட்டசபையில் பதிய வைப்போம். இந்த அரசு, ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்பதை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்பதையும் ஊகிக்க முடியாது.

டவுட் தனபாலு: 'கேப்டன்' இருந்தப்ப இருந்த அந்த அதிரடி, இப்போ 'அவகாசம்' கொடுக்குற அளவுக்கு அமைதியானது ஏன்னு 'டவுட்' வருது. அதே மாதிரி, 'நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது'ன்னு நீங்க சொல்றது அரசுக்கா இல்ல உங்க அரசியல் நிலைப்பாட்டுக்கான்னு 'டவுட்' வருதே!



தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: த.வெ.க., அரசுக்கு உண்மையிலேயே தன் ஊழல் எதிர்ப்பு வாக்குறுதி மீது பற்றுள்ளது எனில், முந்தைய தி.மு.க., அரசு திரும்ப பெற்ற சி.பி.ஐ., விசாரணைகளுக்கான பொது ஒப்புதலை மீண்டும் வழங்க வேண்டும். மேலும், தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு தொடர்பான வழக்குகள் உட்பட பல ஊழல் புகார்களில், லஞ்ச ஒழிப்பு துறை இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்துள் ளது. எனவே, நிலுவையில் உள் ள அனைத்து ஊழல் புகார்கள் மீதும் புதிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு சொல்றது வரவேற்கத்தக்கது தான்... ஆனா, ஊழலற்ற நிர்வாகம் அமையணும்னா அதுக்கு சி.பி.ஐ., மட்டும்தான் தீர்வா இல்ல மாநில விசாரணை அமைப்புகள் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையான்னு 'டவுட்' வருதே!



பத்திரிகை செய்தி: தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'விஜய் எனும் சுனாமி ஒட்டுமொத்தமாக ஓட்டுகளை அள்ளி சென்று விட்டது; கவலைப்பட வேண்டாம். அரசியலில் ஏற்றம், இறக்கம் சகஜம்; முதல்வராக இருந்த ஸ்டாலினே, அவர் தொகுதி யில் தோற்று விட்டார். நாம் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்' என்றார்.

டவுட் தனபாலு: சுனாமி வந்தா கரை ஓரத்துல இருக்கிறவங்கதானே பாதிக்கப்படுவாங்க; நடுவாந்திரமா 'நங்கூரம்' பாய்ச்சி நிக்குற ஒரு பேரியக்கம், ஏன் சுனாமி அள்ளிக்கிட்டு போற -------------துாரத்துல பலவீனமா நின்னுச்சுன்னு 'டவுட்' வருது. அப்புறம், அடுத்த அஞ்சு வருஷத்துல இந்த சுனாமி 'வறட்சி'யா மாறிடுமா, இல்லை நீங்க 'அணை' கட்டப் போறீங்களான்னு இன்னொரு 'டவுட்'டும் வருதே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap