Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஜூன் 01, 2026 12:27 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2026 12:27 AM

2


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை: அ.தி.மு.க.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து, த.வெ.க.,வுக்கு அழைத்து சென்றுள்ளனர். கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பான விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், அவர்களின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆளும் கட்சியில் சேர்த்தது சர்ச்சைக்குரியது. கட்சி தாவிய நான்கு பேரும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். த.வெ.க., அரசு அனுபவமற்ற கத்துக்குட்டி அரசு; எல்.கே.ஜி., நிலையில் உள்ளது.

டவுட் தனபாலு: த.வெ.க., அரசு கத்துக்குட்டியாகவும், எல்.கே.ஜி., நிலையிலும் இருக்குன்னு சொல்றீங்களே... அதனால, உங்க கட்சியில் ஜெயித்த அனுபவம் வாய்ந்த எம்.எல்.ஏ.,க்களை துாக்கிட்டு வந்து, அவங்களிடம் அரசியல் பாடம் படிக்கிறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

பத்திரிகை செய்தி: சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்த வி.சி.க., தலைவர் திருமாவளவன், தி.மு.க., தலைமை அழுத்தத்தால், போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். தி.மு.க., தலைமை பேச்சை கேட்காமல் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், தற்போது அமைச்சராகி இருக்கலாம். தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த, கட்சியை வளர்க்க உதவியாக இருந்திருக்கும். நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என்ற வருத்தத்தில் இருக்கிறார்.

டவுட் தனபாலு: வி.சி.க., போன்ற கட்சிகள், காலம் முழுக்க அப்படியே இருக்கணும்... தாங்கள் ஒதுக்கும்அஞ்சாறு சீட்களுக்காக, தங்களுக்கு சேவகம் செய்துட்டு இருக்கணும் என்ற தி.மு.க.,வின், 'பெரியண்ணன்' மனோபாவம் திருமாவளவனுக்கு அப்பவே தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வோரை த.வெ.க., வில் சேர்ப்பதன் வாயிலாக, அ.தி.மு.க.,வையும் ஜெயலலிதாவின் தொண்டர்களையும் விஜய் அழிக்க பார்க்கிறார். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை விஜய் ஏமாற்ற பார்த்தார்; நல்ல வேளையாக அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். இந்த கஷ்டமான நேரத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் அ.ம.மு.க., இருக்கிறது.



டவுட் தனபாலு: உங்க கட்சியில ஜெயித்த ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வும் த.வெ.க., பக்கம் தாவிட்டதால, உங்க கட்சியில் இழுக்க ஆளே இல்லையே... அதனால, அ.தி.மு.க., கூட்டணியை விட்டால் உங்களுக்கு வேறு புகலிடம் ஏதும் இல்லை என்பதில், 'டவுட்'டேஇல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap