தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:

தெலுங்கானா அரசின் காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணத்துக்கு, மத்திய பா.ஜ., அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில், பாரபட்ச முறையில் சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முதலீட்டை ஈர்க்க மேற்கொள்ளப்படும் இத்தகைய வெளிநாட்டு பயணத்தை தடுப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும்.

டவுட் தனபாலு:

'முதலீடுகளை ஈர்க்கப் போகிறேன்' என்ற பெயரில் முதல்வர்கள், அமைச்சர்கள் எல்லாம் மக்கள் வரிப்பணத்துல வெளிநாட்டு சுற்றுலா போறது இப்ப அதிகமாகிடுச்சு... இப்ப இருக்கிற நவீன தொழில்நுட்ப யுகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டம் நடத்தியே, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாமே... அதை விட்டுட்டு பணம், நேரத்தை வீணடிச்சு வெளிநாடுகளுக்கு பறக்கணுமா என்ற, 'டவுட்' தான் வருது!

----

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார்:

ஓட்டு போட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சாப்பிட சோறு இல்லை; ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் தருகிறது த.வெக., அரசு. அதற்கு காரணம் இருக்கிறது. த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அமைச்சர் பதவி கேட்பதால், அவர்களை சரிக்கட்டி, அமைச்சர் போல வலம் வரச் செய்வதற்காகவே கார் கொடுக்க உள்ளனர்.

டவுட் தனபாலு:

த.வெ.க.,வில் எம்.எல்.ஏ.,வாகி இருக்கும் முக்கால்வாசி பேர், எளிய பின்னணியில் இருந்து வந்தவங்க... திராவிட கட்சியினர் மாதிரி சாதாரண கவுன்சிலர் பதவியில் அமர்ந்தாலும், ரெண்டே மாசத்துல கார் வாங்கும், 'வித்தை' எல்லாம் அவங்களுக்கு தெரியாது என்பதால் தான், கார் தர்றாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

----

கவிஞர் வைரமுத்து:

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை, நட்பின் அடிப்படையில் சமீபத்தில் சந்தித்தேன். சட்டசபை நேரடி ஒளிபரப்பை, 45 நிமிடங்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். 'சட்டசபையை சபாநாயகர் பிரபாகர் சிறப்பாக நடத்துகிறார்' என, ஸ்டாலின் பாராட்டினார். 'சட்டசபையின் ஆட்ட நாயகன் பிரபாகர் என, சமூக வலைதளங்கள் பேசுகின்றன' என்றேன். 'அப்படியா...' என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

டவுட் தனபாலு:

இதுல இருந்து, 'மாற்று கட்சியினரையும் மதிக்கக்கூடியவர் ஸ்டாலின்'னு, நீங்க சொல்ல வர்றது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதேநேரம், 'சமூக வலைதளங்களில் எல்லாம் ஸ்டாலினுக்கு பரிச்சயமே இல்லை' என்ற அர்த்தமும் சேர்த்தே வருது என் பதிலும், 'டவுட்' இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us