/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
8 கி.மீ., மோப்பம் பிடித்து ஓடி கொலையாளியை பிடித்த நாய்
/
8 கி.மீ., மோப்பம் பிடித்து ஓடி கொலையாளியை பிடித்த நாய்
8 கி.மீ., மோப்பம் பிடித்து ஓடி கொலையாளியை பிடித்த நாய்
8 கி.மீ., மோப்பம் பிடித்து ஓடி கொலையாளியை பிடித்த நாய்
ADDED : ஜூலை 18, 2024 02:23 AM

தாவணகெரே : கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், சென்னபூர் கிராமத்தில் வசித்தவர் சந்தோஷ், 33. கடந்த 15ம் தேதி இரவு, சென்னபூர் கிராமத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் உள்ள அரகேரா கிராமத்தில், சந்தோஷ் இறந்து கிடந்தார்.
அவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொன்றது தெரிந்தது. சந்தேபென்னுார் போலீசார் விசாரித்தனர். ஆனால், கொலையாளிகள் பற்றி துப்பு கிடைக்கவில்லை.
இதனால், தாவணகெரேயில் இருந்து மோப்ப நாய் துங்கா வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்திற்கு, நாயை நேற்று முன்தினம் இரவு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கிருந்து ஓட துவங்கிய நாய், தொடர்ந்து 8 கி.மீ., ஓடி, சென்னபூர் கிராமத்தில் வசிக்கும் ரங்கசாமி, 33, என்பவர் வீட்டின் முன் நின்று குரைத்தது. வீட்டிற்குள் சென்ற போலீசார், ரங்கசாமியை பிடித்து விசாரித்தனர்.
ரங்கசாமியும், சந்தோஷும் நண்பர்கள். ரங்கசாமி மனைவியுடன் சந்தோஷ் அடிக்கடி பேசினார். இதனால், இருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருக்கும் என்று ரங்கசாமி சந்தேகித்தார்.
இது குறித்து, சந்தோஷிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சந்தோஷை, ரங்கசாமி கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிந்தது. ரங்கசாமியை போலீசார் கைது செய்தனர்.
கொலையாளியை பிடித்து கொடுத்த மோப்ப நாய்க்கும், அதன் பயிற்சியாளருக்கும் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.