/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசார் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: ஆபாச வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது

UPDATED : ஜூன் 13, 2025 06:35 AM
ADDED : ஜூன் 13, 2025 01:51 AM

மூணாறு:போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
இடுக்கி மாவட்டம், வண்டிபெரியாறு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் வைசாக் 39. இவர், அதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் போலீசுக்கு, அவர் உடை மாற்றும் ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டியுள்ளார். ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், இடுக்கி மகளிர் போலீஸ் பிரிவில் புகார் அளித்தார். இடுக்கி சைபர் கிரைம் போலீசார் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசார் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராவை பொருத்திய வைசாக், அதனை தனது அலைபேசியுடன் இணைத்துள்ளார். அதில் பெண் போலீசார் உடைமாற்றும் ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளார். சபரிமலை மண்டல காலம் முதல் கடந்த ஏழு மாதங்களாக ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது. இடுக்கி எஸ்.பி., விஷ்ணுபிரதீப் உத்தரவுபடி வைசாக்கை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரது அலைபேசியை கைப்பற்றி ஆய்வு நடத்தியபோது ஆபாச வீடியோக்கள் ஏராளம் இருந்தன.
இது குறித்து எஸ்.பி., விஷ்ணு பிரதீப் கூறியதாவது: வண்டி பெரியாறு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவம் போலீஸ் துறைக்கு கடும் வெட்கக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. வைசாக்கை போலீஸ் காவலில் எடுத்து சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும். அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.
போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசாருக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், வண்டி பெரியாறு சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.