/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
போதும்; கட்சியை மகனிடம் கொடுங்கள்!
/
போதும்; கட்சியை மகனிடம் கொடுங்கள்!
PUBLISHED ON : ஜூன் 06, 2025 12:00 AM

டாக்டர் எஸ்.அர்த்தனாரி, சென்னையில்இருந்து எழுதுகிறார்:
கடந்த, 1960ல் நாம் இருவரும், சென்னை மருத்துவக் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தபோது, பட்டியல் இன மக்களுக்கு உதவித் தொகை வராமல், விடுதியிலிருந்து விரட்டியபோது, நாம் போராடினோம்; அதை மறக்க முடியாது
கடந்த, 1967ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்களின் வேலை வாய்ப்புக்காக, அன்றைய பார்க் டவுன் எம்.எல்.ஏ., விடம் கோபமாக விவாதம் நடத்தியதை மறக்க முடியாது
1996ல் நான், ராயப்பேட்டை மருத்துவ மனை தலைமை இதய நோய் நிபுணராக இருந்தபோது நீங்கள், வள்ளுவர் கோட்டம் அருகே நடத்திய போராட்டத்தின்போது, நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நான் சிகிச்சை அளித்ததை மறக்க முடியாது
அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வின் ஜெயலலிதா, உங்களை தேவையில்லாமல் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கிறேன் என்று கூறி, அழுத்தம் கொடுத்து, 'டிஸ்சார்ஜ்' செய்ததை மறக்க முடியாது!
கிட்டத்தட்ட, 45 ஆண்டு காலத்தில், மத்திய அரசு அமைச்சரவையில் ஒரு தலித்துக்கும், 13 வன்னியர்களுக்கும், உங்கள் மகனுக்கும் அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்து, பொருளாதாரத்தில் வலிமையான பாட்டாளி மக்கள் கட்சி என்று உருவாக்கி, ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்தீர்கள்; தமிழகம் அதை நன்கு அறியும்.
மதுவை உற்பத்தி செய்து, சீராக சப்ளை செய்து மக்களைக் குடிகாரர்களாக்கிய இரண்டு அரசியல் கட்சிகளோடும் கூட்டணி வைத்தீர்கள்; அவர்களால் விஜயகாந்துக்கு கொடுத்த தொல்லை போல், உங்களுக்கு கொடுக்க முடியாமல், சிம்ம சொப்பனமாக திகழ்ந்தீர்கள் என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவர்.
இந்த தைரியத்துக்குக் காரணம், உங்களுடைய மருத்துவப் படிப்பும், வலிமையாக போராடும் குணமும், வன்னியர்களின் ஆதரவும், மகனின் பின்புலமும் என்பதே!
உங்களுடைய பேச்சை, 'டிவி'யில் கேட்டபோது, உங்களுடைய 45 ஆண்டு கால நெடிய பயணத்தையும், துன்பத்தையும், வேதனையையும் புரிந்து கொள்ள முடிந்தது.
கல்லுாரி நண்பர் என்ற முறையில், மூத்த இதய நோய் நிபுணர் என்ற முறையில், நான் கூறும் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்...
இப்போது உங்களுக்கு வயது, 86. இந்த வயதில், நாம் நினைப்பது போல, நம் உடல், உள் உறுப்புகள் ஒத்துழைப்பது இல்லை. நம் மூளை, இதயம், சிறுநீரகம் என முக்கிய உறுப்புகள் அனைத்தும், 86 ஆண்டுகள் வேலை செய்தவை. அவற்றை இனியும் வருத்தி, வலிமையைக் காட்டத் தேவையில்லை.
இன்றைய தமிழக அரசியல் களம், மிகவும் கேவலமான அரசியல்வாதிகளையும், காசுக்கு விலை போகும் ஊழல்வாதிகளையும் கொண்டிருக்கிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரசியல்வாதிகளுக்கு ஏற்றார்போல் கேள்விகள் கேட்கும் ஊடகங்கள் மலிந்து விட்டன.
நேர்மையான, தைரியமான, வலிமையாக போராடும் குணமுள்ள உங்களால், இந்த மோசமான அரசியல்வாதிகளை எதிர்கொள்ள முடியாது; இன்றைய அரசியல்வாதிகள் யாரும், உங்களிடம் பேசும் தகுதியும் அற்றவர்கள். எனவே, கட்சியை மகனிடம் கொடுத்துவிட்டு, ஆலோசகராக இருங்கள்!
இன்றைய களத்தில், வலிமை மிக்க, போர்க்குணம் கொண்ட இளைஞராக, பா.ஜ.,வின் அண்ணாமலையும், 'வெற்றி ஸ்டார்' விஜயும் வலம் வருகின்றனர். இவர்களோடு உங்கள் மகன் அன்புமணி போராடட்டும்; அது உங்கள் கட்சிக்கும் நல்லது.
உங்கள் ஆலோசனையோடு, கட்சியின் பயணம், குடிகாரர்களை திருத்தி, நல்ல சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடட்டும்!
எம்.ஜி.ஆரை பின்பற்ற வேண்டும்!
டி.ஈஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தே.மு.தி.க.,
கட்சிக்கு 2026 தேர்தல் முடிந்தபின் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என,
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தமே தவறானது!
அன்று,
அரசியல் எதிரிகளை எதிர்க்கும் திறமை வாய்ந்த பேச்சாளர்களுக்கே
எம்.ஜி.ஆர்., ராஜ்யசபா எம்.பி., சீட் வழங்கினார். அப்படி
தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஜெயலலிதா.
அதேபோன்று தான், வலம்புரி ஜான்!
பொதுக்கூட்டத்தில்
வலம்புரி ஜான் பேசுகிறார் என்றால், மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து
விடுவர். அத்தகைய பேச்சாற்றல் நிரம்பியவர். அவரை ராஜ்யசபா எம்.பி.,
ஆக்கினார், எம்.ஜி.ஆர்.,
ஒருசமயம், ஜி.டி.நாயுடு உறவினர் வரதராஜுலுவிடம், 'அ.தி.மு.க., அலுவலகத்திற்கு கோவையில் இடம் வேண்டும்' எனக் கேட்டார், எம்.ஜி.ஆர்.,
உடனே,
ஓர் இடத்தை ஏற்பாடு செய்து-, அதை எம்.ஜி.ஆர்., வாங்குவதற்கு உதவினார்,
வரதராஜுலு. அதுதான் கோவையில் இன்று இருக்கும், 'இதய தெய்வம் மாளிகை!'
இந்த
உதவிக்கு அவரை ராஜ்யசபா எம்.பி., ஆக்கினார், எம்.ஜி-.ஆர்., இப்படி,
கட்சிக்கு பயன்படுவோருக்கு மட்டுமே ராஜ்யசபா சீட் வழங்கினார், எம்.ஜி.ஆர்.,
ஆனால், ஜெயலலிதா காலத்தில் இப்பதவிகள் தண்ணீரைப் போல் விரயம்
செய்யப்பட்டன. டாக்டர் மஸ்தான், வழக்கறிஞர்கள் தளவாய் சுந்தரம், ஜோதி,
-ஆஸ்டின், ஆடிட்டர் ஆர்.கே.குமார், தொலைக்காட்சி நெறியாளர் ரவி பெர்னாண்ட்,
நெல்லை மேயர் சசிகலா புஷ்பா போன்ற அ.தி.மு.க., பின்புலம் இல்லாதவர்களுக்கு
ராஜ்யசபா சீட்டுகளை ஜெயலலிதா வழங்கினார்.
வழக்கறிஞர் ஜோதி,
இரண்டாவது முறை எம்.பி., சீட் கேட்டார். மறுத்ததால் சொத்துக் குவிப்பு
வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டு, அவர் சிறைக்குச் செல்ல
மு-க்கிய காரணமாக இருந்தார்.
இதில் சிலர் தி.மு.க.,வுக்கும், மாற்றுக்கட்சிக்கும் சென்று விட்டனர்.
ஜெயலலிதா
போன்றே பழனிசாமியும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளை தொடர்ந்-து விரயம் செய்து
வருகிறார். வைத்தியலிங்கம், முனுசாமிக்கு ராஜ்யசபா சீட் வழங்க, சட்டசபை
தேர்தலுக்காக அதை அவர்கள் ராஜினாமா செய்தது தி.மு.க.வுக்கு சாதகமாகி
விட்டது.
பன்னீர்செல்வம் ஆதரவாளர் என்ற ஒரே தகுதிக்காக தர்மருக்கு
எம்.பி., சீட் வழங்கினார் பழனிசாமி. இப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான
இன்பதுரைக்கும், தனபாலுவுக்கும் ராஜ்யசபா எம்.பி., சீட் வழங்கியுள்ளார்.
இப்படி மதம் மற்றும் ஜாதி ரீதியாக ராஜ்யசபா சீட் வழங்குவதை விடுத்து,
எம்.ஜி.ஆர்., போன்று அரசியல் எதிரிகளை திறமையுடன் எதிர்க்கும் நடிகை
விந்தியா போன்ற பேச்சாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே, அ.தி.மு.க.,
தொண்டர்களின் விருப்பம்!