தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இரு பெரும் கட்சிகள் கடைப்பிடிக்கும் சமூக நீதி!

இரு பெரும் கட்சிகள் கடைப்பிடிக்கும் சமூக நீதி!

இரு பெரும் கட்சிகள் கடைப்பிடிக்கும் சமூக நீதி!

1


PUBLISHED ON : செப் 13, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2026 01:23 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சேலம் மாநகராட்சி தி.மு.க., மேயர் ராமச்சந்திரன், 'காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் சாரதா தேவியின் இருக்கையை கீழே இறக்கினால் தான், மன்றத்தை நடத்துவேன்' என்று கூறியுள்ளார். அதற்கு துணை மேயர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை இரண்டு மாதத்திற்கு இடை நீக்கம் செய்ததுடன், கூட்டத்தை தொடர்ந்து நடத்தாமல், கூட்டம் முடிந்ததாக கூறி புறப்பட்டு சென்றுள்ளார், ராமச்சந்திரன்.

இதைக் கண்டித்து, 'ராமச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளாராம், சென்னை மாநகராட்சி காங்., கவுன்சிலர் ராஜசேகரன்.

மேயருக்கு நகரை நிர்வாகம் செய்யும் பொறுப்புத்தான் உள்ளதே தவிர, உறுப்பினர்களை இடை நீக்கம் செய்யவோ, டிஸ்மிஸ் செய்யவோ அதிகாரம் இல்லை.

இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்து, பெண் துணை மேயரிடம், 'பிலிம்' காட்டியுள்ளார், ராமச்சந்திரன்.

பொதுவாகவே, தி.மு.க.,வினர் மேடைகளில் சமத்துவம், சமூக நீதி என்று வாய் கிழிய பேசினாலும், நடைமுறையில், அதற்கு நேர்மாறாகவே நடந்து கொள்வர்.

கடந்த 1997 தி.மு.க., ஆட்சியில், மதுரை மாவட்டத்தில் உள்ள மேலவளவு ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவி, பட்டியலின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டது.

இதை ஆதிக்க ஜாதியினர் கடுமையாக எதிர்த்ததோடு, தேர்தலையும் புறக்கணித்தனர். அவர்களது மிரட்டலையும் மீறி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முருகேசன் தலைவராகவும், மூக்கன் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர்.

பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதை சகித்து கொள்ள முடியாத ஆதிக்க ஜாதியினர், முருகேசனை ஊராட்சி அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு கோரி, மதுரை கலெக்டரை சந்தித்து விட்டு பேருந்தில் திரும்பி கொண்டிருந்த போது, முருகேசன், மூக்கன் ஆகியோர் உட்பட பட்டியலின சமூகப் பிரதிநிதிகள் ஆறு பேர், கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர்.

தி.மு.க., ஆட்சியில் இந்த ஜாதிய படுகொலை அரங்கேறியது என்றால், அ.தி.மு.க., ஆட்சியில், கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுதான், ஜாதி ஒழிப்பு போராளிகளான இரு பெரும் கட்சிகளின் சமூக நீதி!

அவர்கள் கட்டிக் காத்துவரும் சமூகநீதி தற்போது, ஆண் - பெண் பேதமாக விரிவடைந்துள்ளது போலும்!

தி.மு.க.,வினருக்கு பேச்சு தான் வெல்லக்கட்டி; செயல்கள் எல்லாம் செங்கல்கட்டி! lll

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கே.மணிவண்ணன், நடுப்பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவது, மக்கள் பிரச்னைகளை அரசுக்கு தெரிவிப்பது, நடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கையை மக்கள் முன்வைத்தால், அவர்களுக்கு அதை விளக்கி புரியவைப்பது, அரசு நல்லது செய்தால் தட்டி கொடுப்பது என்பதாக, வேறு எந்த பத்திரிகையையும் விட, 'தினமலர்' நாளிதழ் சிறப்பாக தன் பத்திரிகை தர்மத்தை கடைப்பிடித்து வருகிறது.

அதிலும், ஊழலுக்கு எதிராக தினமலர் சுழற்றும் சாட்டை, அரசுக்கு அச்சத்தை ஏற்பட வைப்பதால், அரசு விளம்ப ரங்கள் தரப்படுவதில்லை.

ஆனாலும், அதை எல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாமல், அரசு மற்றும் மக்களுக்கு மிக சிறந்த இணைப்பு பாலமாக திகழும் தினமலர் நாளிதழ், 75ஆம் ஆண்டு பவளவிழாவை நிறைவு செய்வது, என் போன்ற வாசகர்களுக்கு பெருமிதமாக உள்ளது.

தினமலர் நாளிதழுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

ஊழல் செய்ய தயங்குவர்!


கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக முதல்வர், ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி வருகிறார். அதற்கு பலனாக, தற்போது அரசு அலுவலகங்களில், 'கை நீட்டுவது' ஓரளவு குறைந்து உள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினரை பார்த்து, 'என் மேஜையில் உள்ள ஊழல் கோப்புகளை திறக்க வைத்து விட வேண்டாம்' என்று எச்சரித்தார்.

உடனே, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, 'நாங்கள் தவறு செய்து இருந்தால், எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; அதைவிட்டு, உங்கள் உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்' என்றார்.

இப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், நேருவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என, 30 இடங்களில் அதிரடி சோதனை செய்துள்ளனர்.

சோதனையுடன் முடித்துக் கொள்ளாமல், விரைந்து நடவடிக்கை எடுத்து ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கடந்த ஐந்தாண்டுகளில் செய்த ஊழல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் குற்றம் செய்தவர்களில் பாதிப்பேராவது வரும் நான்கரை ஆண்டுகளில் தண்டிக்கப்பட்டால் தான், அடுத்து ஊழல் செய்ய தயங்குவர்!

காங்., எண்ணம் பலிக்குமா?


ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு; அதில் எந்தவித மாற்றமும் கிடையாது' என்று கூறியுள்ளார், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.

சட்டசபை தேர்தலுக்கு முன், 'தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாருங்கள்... ஆட்சியில் பங்கு தருகிறோம்' என்று, அக்கட்சி தலைவர் விஜய் பலமுறை அழைப்பு விடுத்தும், சொந்த லாபங்களுக்காக, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது, காங்கிரஸ்.

தி.மு.க., கூட்டணியில் பல விருப்பமின்மைகள் இருந்த போதும், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும் என்ற எண்ணத்தில், அக்கட்சியின் காலடியில் விழுந்து கிடந்தது காங்கிரஸ்.

இப்போதோ, த.வெ.க., வை இண்டி கூட்டணியில் இணைத்து, பார்லிமென்ட் தேர்தலை சந்திக்க துடிக்கிறது.

த.வெ.க.,வின், 100 நாள் ஆட்சி பயணத்தில், சினிமா ரசிகர்களை மட்டுமல்ல; நடுநிலையாளர் களையும் விஜய் கவர்ந் துள்ளார் என்பதே நிதர்சனம்!

இப்படியே நேர்வழியில் ஆட்சி நடந்தால், வரும் பார்லிமென்ட் தேர்தலில், த.வெ.க., தனித்து போட்டியிட்டால் கூட, தமிழகத்தின், 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச் சரியமில்லை.

மேலும், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் தமிழகத்தை போன்றே விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இதையெல்லாம் அறிந்து தான், காங்கிரஸ், த.வெ.க.,வை தன் கைப்பிடிக்குள் வைக்க பார்க்கிறது!

காங்., எண்ணம் எந்த அளவு பலிக்கும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us