Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 21, 2006

பீஹார் மாநிலம், தும்ரான் என்ற கிராமத்தில், பைகாம்பர் கான் - மித்தன்தம்பதியின் மகனாக 1916, மார்ச் 21ல் பிறந்தவர், உஸ்தாத் பிஸ்மில்லா கான்.இவருக்கு, பெற்றோர் கமருதீன் என பெயர் சூட்டினர். இவரை முதலில் கண்ட இவரது தாத்தா, இறைவனின் திருப்பெயரால், 'பிஸ்மில்லாஹ்' என கூறியதால், அதுவே நிலைத்தது.

இவரது முன்னோர், காசி விஸ்வநாதர் ஆலயத்திலும், அரண்மனைகளிலும் இசை கலைஞர்களாக இருந்தனர். இவர், தன் 20 வயதில் காசிக்கு சென்று, தன் மாமாவிடம் ஷெனாய் இசையை கற்றார். முதல் இந்திய குடியரசு விழாவில், செங்கோட்டையை நோக்கிய ஊர்வலத்தில், பிரதமர் நேரு உள்ளிட்டோர் வலம் வர, இவர் ஷெனாய் இசை நிகழ்த்தினார்.

தினமும் ஐந்து வேளை தொழும் வழக்கமுள்ள இவர், மற்ற மதங்களையும் கடவுளையும் நேசித்தார். பல கோவில்களிலும் வாசித்துள்ளார். 'பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாடமி, தான்சேன்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2006ல் தன், 90வது வயதில், இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap