Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 16:

சேலம் மாவட்டம், கருப்பூரில், பழனியின் மகனாக, 1951ல் இதேநாளில் பிறந்தவர் ப.தனபால். இவர், தன் ஊரில் பள்ளிப்படிப்பை முடித்து, சேலம் அரசு கலைக் கல்லுாரியில், எம்.ஏ., வரலாறு படித்தார்.

அண்ணாதுரையின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவங்கிய போது அதில் இணைந்தார். அக்கட்சி சார்பில் போட்டியிட்டு, ஏழு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானார்.

இவருக்கு, கடந்த 1988ல் சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட போது, அ.தி.மு.க.,வில் அப்போதைய முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஜெயலலிதா நேரில் சென்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். 2001ல், ஆதிதிராவிடர் நலம், உணவு, கூட்டுறவு துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், 2011ல் துணை சபாநாயகராகவும், 2012 மற்றும் 2016ல் சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஒன்பது ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானங்கள், நெருக்கடிகளின்போது நிதானத்துடனும், சட்டவிதிகளின்படியும் சபையை நடத்தி, மாண்பை காத்தார். இவரின் கதையைத் தழுவி, மாமன்னன் திரைப்படம் எடுக்கப்பட்டது.

ராசிபுரம் த.வெ.க., - எம்.எல்.ஏ., லோகேஷ் தந்தையின், 75வது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us