தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 24, 1981

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாருக்கு அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில், சிவந்தி ஆதித்தன் - கனகம் தம்பதியின் மகனாக, 1905, செப்டம்பர் 27ல்பிறந்தவர், சி.பா.ஆதித்தனார்.

திருச்சியில் பட்ட படிப்பை முடித்து, பிரிட்டனில் சட்டம் படித்தார். அங்கிருந்தபடியே தென்னாப்ரிக்க, இந்திய பத்திரிகைகளில் செய்தி கட்டுரைகளை எழுதினார். நாடு திரும்பி, 'குடியரசு' பத்திரிகையில் எழுதினார்.

பின், சிங்கப்பூரில் வழக்கறிஞராக பணியாற்றி, நாடு திரும்பினார். சாதாரண மக்களுக்கான மொழிநடையில் நாட்டு நடப்புகளை தெரிவிக்க, 'தினத்தந்தி, மாலை முரசு' ஆகிய நாளிதழ்களையும் 'ராணி' வார இதழையும், 'ராணி முத்து' மாதாந்திர இதழையும் துவக்கி நடத்தினார்.

'நாம் தமிழர்' என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி, தமிழர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்றார். தி.மு.க.,வில் இருந்த இவர், அதிலிருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து அ.தி.மு.க.,வை துவக்கிய போது அதில் சேர்ந்தார். சாத்தான் குளம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளின் எம்.எல்.ஏ., மேலவை உறுப்பினர், சபாநாயகர், கூட்டுறவு துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த இவர், தன் 76வது வயதில், 1981ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us