தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'பார்முலாவை மறக்க முடியுமா?'

'பார்முலாவை மறக்க முடியுமா?'

'பார்முலாவை மறக்க முடியுமா?'


PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி மாவட்டம், துறையூரில் தி.மு.க., நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், துறையூர் எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், 'நமது அடுத்த சரித்திரமான உதயநிதியை தலைவராக உருவாக்குவதற்கு இளம் பட்டாளங்கள் ஒன்றுதிரள வேண்டும். விஜய் வந்தாலும் சரி அல்லது அவரது அப்பா சந்திரசேகர் வந்தாலும் சரி... தி.மு.க.,வினரின், 'பீல்டு ஒர்க்'கை மீறி எவராலும் ஜெயிக்க முடியாது.

'திருமங்கலம் உட்பட பல தொகுதிகளில் தேர்தல்பணி செய்திருக்கிறோம். மாவட்டச் செயலரோ,எம்.எல்.ஏ.,வோ சரியில்லை என்று கூறுவோர் கூட, தேர்தல் நேரத்தில், கட்சிக் கொடியை நட்டுவிட்டால் போதும், தனிவேகத்துடன் வேலை செய்வர்...' என்றார்.

இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அதானே... திருமங்கலம் இடைத்தேர்தல்ல தானே, ஓட்டுக்குநோட்டு என்ற பார்முலாவை தி.மு.க., அறிமுகப்படுத்தியது... அதை மறக்க முடியுமா?' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us