தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இந்த ஆணவப்பேச்சே போதும்!'

'இந்த ஆணவப்பேச்சே போதும்!'

'இந்த ஆணவப்பேச்சே போதும்!'


PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழியக்க அமைப்பு செயலரான மறைந்த வணங்காமுடி படத்திறப்பு விழா, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், முத்தமிழ் மன்றம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் நடந்தது. வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமை வகித்து, வணங்காமுடி படத்தை திறந்து வைத்தார்.

இதில் பங்கேற்ற, தி.மு.க., ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், 'தி.மு.க.,வை அகற்றுவோம் என சொன்னவர்களை காலமே விழுங்கியிருக்கிறது. தி.மு.க., என்பது கட்சியல்ல; இயக்கம். கும்பல் அரசியல் நடத்துகிற கட்சியல்ல; கொள்கை அரசியல் நடத்துகிற கட்சி. இதை அழிப்பதற்கு ராணுவத்தாலேயே முடியாது; அமித் ஷாவால் எப்படி முடியும்?' என்றார்.

இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வை அழிக்க ராணுவம் எல்லாம் தேவையில்லை... இந்த மாதிரி ஆணவப்பேச்சே போதும்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us