தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/'நல்லாவே பாடம் நடத்துறார்!'

'நல்லாவே பாடம் நடத்துறார்!'

'நல்லாவே பாடம் நடத்துறார்!'


PUBLISHED ON : செப் 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில், 'பேரிடர், அவசர காலங்களில் முதலுதவி செய்வது எப்படி?' எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில், திருப்பூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வீரராஜ், மாணவர்கள் மத்தியில்

பேசுகையில், 'சமீபத்தில் வெள்ளம் வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? பாலைவன தேசத்தில் வெள்ள சேதம் கேள்விப்பட்டீர்களா?' என, கேள்வி கேட்டார்; மாணவர்களிடம் பதில் இல்லை. உடனே, 'கட்டாயம் பேப்பர் படியுங்கள். வளரும்

தலைமுறை, நாட்டு நடப்பு தெரிந்து கல்லுாரிக்கு வாருங்கள். சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது என, தினசரி அறிந்து கொள்ளுங்கள். விண்ணில் இருந்து, 140 மீட்டர் நீளமுள்ள கல் விழப் போகுதாம்... அந்த கல்என் தலையில் விழக்கூடாதுன்னு நினைப்பதற்காகவாச்சும் பேப்பர் படியுங்கள்...' என்றார். பேராசிரியர் ஒருவர், 'தீயணைப்பு அதிகாரி நல்லாவே பாடம் நடத்துறார்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us