Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'எல்லாருக்கும் கிடைச்சிடுமா?'

 'எல்லாருக்கும் கிடைச்சிடுமா?'

 'எல்லாருக்கும் கிடைச்சிடுமா?'


PUBLISHED ON : மார் 10, 2026 02:22 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 10, 2026 02:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், சமீபத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் கல்வியாளர் அணி மாநிலச் செயலரான தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பங்கேற்றார்.

அவர் பேசும்போது, 'என் நகப்பூச்சு, உதட்டு சாயம் எல்லாம் பார்த்துவிட்டு, நவநாகரிக பெண்மணி என நினைத்துவிடக் கூடாது. புழுதி மற்றும் கவுச்சி வீசும் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்ற கிராமத்தில், தலையில் வேப்பெண்ணெய் வைத்துக் கொண்டு அரசு பள்ளியில் படித்து, முனைவர் பட்டம் பெற்ற, சுத்தமான கரிசல் காட்டு தமிழச்சி நான்.

'தி.மு.க., சார்பில் கொடுக்கப்படும் திட்டங்கள் எல்லாம் இலவசங்கள் அல்ல; சமூக நீதிக்கான திட்டங்கள்' என்றார்.

இதை கேட்ட மூத்த தொண்டர் ஒருவர், 'இவங்க அப்பா தங்கபாண்டியன் அமைச்சரா இருந்தாரு... அதனால, இவங்களும் அரசியல்ல பெரிய ஆளாகிட்டாங்க... கவுச்சி வாடை வீசும் கிராமத்துல பொறந்த எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைச்சிடுமா...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap