தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'நமக்கு தான் பிரஷர் ஏறுது'

 'நமக்கு தான் பிரஷர் ஏறுது'

 'நமக்கு தான் பிரஷர் ஏறுது'


PUBLISHED ON : மார் 03, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2026 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் சமீபத்தில் நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி, மனுக்களை பெற்றார்.

அப்போது அணைக்கட்டு தாலுகா, செதுவாலை, அரியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 250 பேருக்கு வீட்டு மனை பட்டா கேட்டு, இந்திய கம்யூ., கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர் .

கலெக்டர் சுப்புலட்சுமி, 'ஏற்கனவே செதுவாலையில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். நீங்க, 'டிராமா' பண்றீங்களா... உங்களை கைது செய்வோம்' என காட்டமாக கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த கம்யூ., கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா செய்தனர். அங்கிருந்த போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை ஒருவழியாக சமரசப்படுத்தி அனுப்பினர்.

அப்போது ஒரு போலீஸ்காரர், 'தேர்தல் நேரத்தில் கேட்டால் தான் கிடைக்கும்னு கூட்டம் கூட்டமா வந்துடுறாங்க... இவங்களால, நமக்கு தான் பிரஷர் ஏறுது பா...' என முணுமுணுக்க, சக போலீசார் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us