Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'யாரை எதிர்த்து போராட்டம்!'

 'யாரை எதிர்த்து போராட்டம்!'

 'யாரை எதிர்த்து போராட்டம்!'


PUBLISHED ON : ஏப் 21, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2026 01:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம ஸ்ரீநிவாசன், சமீபத்தில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில், 'தமிழ்நாடு வெல்லும்... தமிழ்நாடு போராடும்' என்று சொல்கின்றனர். தி.மு.க.,வுக்கு 30 சதவீதத்துக்கு கீழே தான் ஓட்டுகள் உள்ளன. பல தொகுதிகளில், அவர்கள் தோற்பது உறுதி. தமிழகத்தில், 100 சதவீதம் ஓட்டுகளில், 30 சதவீத ஓட்டுகள் கூட வாங்காத தி.மு.க., மீதமுள்ள, 70 சதவீதத்திற்கும் சேர்த்து நாங்க தான் தமிழ்நாடு என்று பேசினால் என்ன அர்த்தம்?

'நாங்க தான் தி.மு.க., என்று சொல்லுங்கள்; அது சரி... அப்ப நாங்கள்லாம் யாரு... அ.தி.மு.க., யாரு... பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., இவங்கள்லாம் யாரு? 'புலிக்கு பயந்தவன் எல்லாம், என்மேல வந்து படுத்துக்கோ'ன்னு சொன்ன மாதிரி, 'தமிழ்நாடு வெல்லும்... தமிழ்நாடு போராடும்னு சொல்றீங்களே' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அதானே, ஆளுங்கட்சியா இருந்துட்டு, யாரை எதிர்த்து போராட போறாங்களாம்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us