தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இந்த அதிகாரி பிழைச்சுக்குவார்!'

 'இந்த அதிகாரி பிழைச்சுக்குவார்!'

 'இந்த அதிகாரி பிழைச்சுக்குவார்!'


PUBLISHED ON : மார் 29, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2026 02:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மண்டல அளவிலான, மகளிர் சுயஉதவி குழு உற்பத்தியாளர்கள் - வணிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, மதுரையில் சமீபத்தில் தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.

இதில், உசிலம்பட்டி சப் - கலெக்டரான, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் குமார் பேசுகையில், 'தற்போது தான் தமிழில் கொஞ்சம் கொஞ்சம் பேசுறேன். நான் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதிய போது, பொருளாதார ரீதியாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற ரீதியில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

'அதற்கு, நிறைய வாய்ப்பு இருப்பதாக பதில் எழுதினேன். தற்போது, தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியை நேரில் காணும்போது, நான் அன்று சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்பது புரிகிறது' என்றார்.

இதை கேட்ட பெண் ஒருவர், 'வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும், நம்ம அமைச்சர் மனம் குளிர பேசணும் என்பதை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காரு... பிழைச்சுக்குவார்...' என முணுமுணுக்க, சக பெண்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us