PUBLISHED ON : செப் 12, 2026 02:32 AM

நடிகர் ரவி மோகன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மேடவாக்கத்தில், அவருடைய நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், சமீபத்தில் நடந்தது; ரவி மோகன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேடையேறிய துாத்துக்குடி மாவட்ட தலைவர் கார்மேகம் என்பவர், 'மைக்'கை பிடித்ததும், 'ரவி அண்ணா அழைப்பிதழ் கொடுங்க... தமிழகம் முழுக்க இருந்து திரண்டு வருவோம்; கொடியை கொடுங்க, ரசிகர்கள் நாங்க கோட்டையை பிடிப்போம்' என ஆவேசமாக பேசிவிட்டு இறங்க பார்த்தார்.
அவரை அன்போடு இடைமறித்த ரவி மோகன், அவரை கட்டி அணைத்து, அவருடன் சில வினாடிகள் ஏதோ பேசிவிட்டு அனுப்பினார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த சீனியர் நிருபர் ஒருவர், 'நடிகர் விஜய் முதல்வர் ஆகிட்டதால, எல்லா நடிகர்களுக்கும் முதல்வர் கனவு வந்துடுச்சு போலிருக்கே...' என முணுமுணுத்தார்.
சக நிருபரோ, 'நடிகர் தனுஷுக்கு முன்னாடி, இவர் அரசியலுக்கு வந்துடுவார் போலிருக்கே' என, 'கமென்ட்' அடிக்க, அங்கு சிரிப்பலை எழுந்தது.
