PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைசந்தித்தார்.
நிருபர் ஒருவர், 'பா.ஜ.,வினரை நீங்கள் சங்கி என்கிறீர்கள். அவர்கள் உங்களை மங்கி, அதாவது குரங்கு என கிண்டல் செய்துள்ளனரே' என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு செல்வப்பெருந்தகை, 'அதை வரவேற்கிறோம். அனைவரும் குரங்கில் இருந்து தான் வந்துள்ளோம். நாங்கள் ஒன்றும் நெருப்பில் இருந்து, ஆவியில் இருந்து வரவில்லை. குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான் என அறிவியல் கூறுகிறது. அறிவியல் பூர்வமாக அவர்கள் எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்...' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'நம்ம அண்ணன் ஆவேசமா பதிலடி தருவார்னு பார்த்தா, இப்படி விஞ்ஞானியா மாறி விளக்கம் குடுத்துட்டாரே பா...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.