PUBLISHED ON : ஜன 26, 2024 12:00 AM

பா.ம.க. தலைவர் அன்புமணி பேட்டி: தமிழக அரசு, துாத்துக்குடியில்
வெள்ள மீட்பு பணிகளை கூடுதல் கவனம் செலுத்தி தற்போது செய்து
கொண்டிருக்கிறது.வேகம் போதுமானதாக இல்லை. முதல்வர் இங்கே இரண்டு நாட்கள்
தங்கி இருந்து மீட்பு நிவாரண பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
தி.மு.க.வுல
தான் கூட்டணி கதவை, பா.ம.க.வுக்கு மூடியாச்சுன்னு சொல்றாங்களே... இப்ப
எதுக்கு 'மெதுவடை'யாய் பேசுகிறார் இவர்? ஒரு வேளை, கதவு மீண்டும் திறக்க
வாய்ப்பு இருக்கிறது என்ற நினைக்கிறாரோ?
தமிழக பா.ஜ. விவசாய பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டையில், 100க்கும் மேற்பட்ட சாயக்கழிவு சுத்திகரிப்பு பட்டறைகள் இருந்தாலும், சில ஜவுளி நிறுவனங்கள், சுத்திகரிப்பு செலவை மிச்சப்படுத்தி, அதிக லாபம் ஈட்ட, மாசு கட்டுப் பாட்டு வாரியத்துடன் கூட்டணி அமைத்து, சுத்தி கரிக்கப்படாத சாயக்கழிவுநீரை வெளியேற்றி, சுற்றுப்புறத்திற்கும் அருகில் உள்ள கிராமங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
'யார் எக்கேடு கெட்டால் என்ன' என்று நினைக்கும் அதிகாரிகள் திருந்தாத வரைக்கும், இந்த கொடுமைகளுக்கு தீர்வே கிடையாது!
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 'சட்டசபை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கூறி வந்த நிலைப்பாட்டை, ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க. மாற்றியது அதிர்ச்சி அளிக்கிறது.
எதிர்க்கட்சியா இருக்கும் போது, 'டாஸ்மாக்' கடைகளை மூடுவோம்னு கூடத்தான் சொன்னாங்க... செஞ்சாங்களா?
பாரத் ஹிந்து முன்னணி மாநில தலைவர் பிரபு அறிக்கை: இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும், ஹிந்து மததத்திற்கு எதிரான கருத்துக்களை, திரைப்படங்களை இயக்குனர் ரஞ்சித், அமீர் போன்ற ஒரு சிலர் திணிக்கின்றனர். மத வெறி, தீண்டாமை, ஜாதிய பிரச்னை, ஹிந்து மதத்தில் மட்டும் இருப்பது போன்ற பிம்பத்தை, திரைப்படங்களில் காண்பிக்கின்றனர். இது போன்ற ஹிந்து விரோத செயல்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன.
மற்ற மதங்களில் இருக்கும் ஜாதிய பேதங்களை இவர்கள் படமாக எடுத்தால், அதன்பின் இவர்கள் தமிழகத்தில் வசிக்க முடியாதே!

