தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூன் 19, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2026 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:

தமிழகத்தின் நிதி நிலையை அறியாமல், தேர்தலின் போது த.வெ.க., வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இப்போது, அரசிடம் நிதி இல்லை என்பதை வெளிப்படுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை என்பது காரணங்களை கூறுவதாக இல்லாமல், தீர்வுகளை வழங்குவதாக இருக்க வேண்டும்.

வெள்ளை அறிக்கை விவகாரத்தில், தி.மு.க.,வின் கருத்தும், இவரது கருத்தும் ஒரே மாதிரி இருக்கே... த.வெ.க., எதிர்ப்பு என்ற போர்வையில், ரெண்டு கட்சிகளும் நெருங்கி வருவது நல்லாவே தெரியுது!

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் அறிக்கை:

'காவிரி டெல்டா பகுதியில் அனுமதிக்கப்பட்ட, நிலக்கரியுடன் தண்ணீர் கலந்து பூமிக்கடியில் உருவாகும் இயற்கை எரிபொருளான, 'ஹைட்ரோ கார்பன்' கிணறுகளை மூட வேண்டும்' என, விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்தோம். இந்த திட்டத்தை கண்டித்து, புதுச்சேரியில் இருந்து ராமநாதபுரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினோம். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. கிணறுகள் அமைக்கும் பணியை மேற்கொண்டால், கடும் போராட்டங்களை நடத்த விவசாயிகள் தயாராக உள்ளனர்.

ஏற்கனவே, காவிரி தண்ணீரின்றி வாடும் டெல்டா விவசாயிகளை, 'ஹைட்ரோ கார்பன்' திட்டமும் காவு வாங்கிடக் கூடாது!

தமிழக காங்., ஒருங்கிணைப்பாளர் டி.என்.அசோகன் பேச்சு:

காங்கிரஸ் கட்சியிலிருந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டதும், அந்த பதவியில் இருந்த யுவராஜாவுக்காகவே த.மா.கா., துவக்கப்பட்டது. தற்போது, த.மா.கா.,வில் இருந்து யுவராஜா விலகி விட்டார். எனவே, இனி மூப்பனாரின் உண்மையான விசுவாசிகள், தாய் கட்சியான காங்கிரசில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். உங்களின் வரவுக்காக, காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. காங்கிரசும், த.மா.கா.,வும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரசில் த.மா.கா.,வினர் இணைந்தாலும், அங்க புதுசா ஒரு கோஷ்டி முளைக்கும்... அதை தவிர பெருசா எந்த பலனும் இருக்காது!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது விரைந்து விசாரணை நடத்தி, மிக கடும் தண்டனை வழங்க வேண்டும்.

இந்த மாதிரி கொடூரன்களுக்கு மரண தண்டனை வழங்குவதே சரியான தீர்வாக அமையும்... ஆனா, மனித உரிமை போராளிகள் அதுக்கு முட்டுக்கட்டை போடுவாங்களே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us