ADDED : ஜூன் 17, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியவில்லை
உழவர்கரை பசும்பொன் நகர் 2வது, குறுக்கு தெருவில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
நடராஜன், உழவர்கரை.
தெரு விளக்கு பழுது
உருளையன்பேட்டை பாரதி வீதி, சின்ன வாய்க்கால் தெரு சந்திப்பில் தெரு விளக்கு எரியாமல் உள்ளது.
சுகந்தி, உருளையன்பேட்டை.
குண்டும் குழியுமான சாலை
ரெட்டியார்பாளையம் அன்னை பெரிய நாயகி நகரில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
லட்சுமி, ரெட்டியார்பாளையம்.
சிதறி கிடக்கும் குப்பைகள்
முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் பேட்டை 2வது குறுக்கு தெருவில், குப்பை வண்டிகள் சரியாக வராமல் இருப்பதால், சாலையில் குப்பைகள் சிதறி கிடக்கிறது.
ஆனந்தி, முத்தியால்பேட்டை.