ADDED : ஜூன் 07, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பைகள் தேக்கம்
ராஜ்பவன் தொகுதி சுய்ப்ரேயன் வீதியில் குப்பை வண்டி சரிவர வராததால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
ராஜேஸ்வரி, ராஜ்பவன்.
போக்குவரத்து நெரிசல்
வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கதிவரன், வீராம்பட்டினம்.
காமராஜர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ரவி, காமராஜர் சாலை.
பயணியர் நிழற்குடை தேவை
ரெட்டியார்பாளையத்தில், பயணியர் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
மதி, ரெட்டியார்பாளையம்.