நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
முருங்கப்பாக்கம் கணபதி நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
நேதாஜி, முருங்கப்பாக்கம்.
சாலையில் பேனர்கள்
பண்டசோழநல்லுார் நான்குமுனை சந்திப்பில், பேனர்கள் வைத்திருப்பதால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ராஜேஷ்குமார், பண்டசோழநல்லுார்.
சாலை மோசம்
சந்தைபுதுக்குப்பம் - மயிலம் ரோடு, மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பாலன், சந்தைபுதுக்குப்பம்.
குடிநீர் தட்டுப்பாடு
லாஸ்பேட்டை மெயின்ரோடு, புதுப்பேட்டையில் குடிநீர் சரியாக வராததால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சிவக்குமார், லாஸ்பேட்டை.