/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இந்த மாலைகளில் உள்ள பொருட்களை சமைக்கவும் முடியும்!
/
இந்த மாலைகளில் உள்ள பொருட்களை சமைக்கவும் முடியும்!
இந்த மாலைகளில் உள்ள பொருட்களை சமைக்கவும் முடியும்!
இந்த மாலைகளில் உள்ள பொருட்களை சமைக்கவும் முடியும்!
PUBLISHED ON : ஜூலை 01, 2025 12:00 AM

'யுகா எலைச்சி கிராப்ட்ஸ்' என்ற பெயரில் உலர் பழங்கள், நட்ஸ், மயில் தோகை என பல பொருட்களில் மாலைகள் தயாரித்து, விற்பனை செய்து வரும் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு - சிவரஞ்சனி தம்பதி:
சிவகுரு: எங்களுக்கு சொந்தமாக பூர்வீக ஏலக்காய் தோட்டம் இருக்கிறது. பெற்றோர் இருவருமே, 38 ஆண்டுகளாக ஏலக்காய் மாலை தொழிலை தொடர்ந்து செய்கின்றனர். திருமணத்திற்குப் பின் என் மனைவிதான், 'இந்த தொழிலை ஏன் விரிவாக செய்யக்கூடாது' என்று ஐடியா கொடுத்தார்.
அம்மாவிடம் இருந்து என் மனைவியும் மாலை கட்ட கற்றுக் கொண்டார். இப்போது ஆட்கள் இருந்தாலும், அம்மாவும், மனைவியும்தான் பெரிய, முக்கிய மாலைகள் எல்லாம் கட்டுகின்றனர்.
முதலில் ஏலக்காய் மாலை மட்டும் கட்டிக்கொண்டு இருந்தோம். அதன்பின் பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் வகைகளையும், கிவி, ஆப்ரிகட், செர்ரி, அத்தி, ஸ்ட்ராபெர்ரி போன்ற உலர் பழங்களையும் வைத்து மாலை கட்டி பார்த்தோம்; நல்ல வரவேற்பு கிடைக்கவே, தொடர்ந்து செய்கிறோம்.
தெய்வ விக்ரகங்களுக்கு அணிவிப்பதற்கும், விழாக்களில் வி.ஐ.பி.,க்களுக்கு போடுவதற்கும், சஷ்டியப்த பூர்த்தி போன்ற குடும்ப விழாக்களுக்கும், மாலைகள் வாங்குகின்றனர். இதுதவிர வடமாநிலங்களில் இருந்து விதவிதமாக பலவகை மாலைகள் கேட்டு ஆர்டர்கள் வரும்.
சிவரஞ்சனி: வடமாநில ஆஞ்சநேய பக்தர்கள் முழு பொட்டுக்கடலை, வெல்லம் வைத்து மாலை கேட்பர். சஷ்டியப்த பூர்த்தி விழாக்களுக்கு ருத்ராட்சத்தில், கிரீடம் கேட்டும் ஆர்டர்கள் வரும். மயில் தோகை மாலைக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வடமாநிலங்களில் மயில்கள், தோகையை உதிர்க்கும் பருவத்தில், அங்கிருந்து மயில் தோகை வாங்கி வைத்துக் கொள்வோம்.
மாலை தயாரிக்க நாங்கள் பசை உபயோகிப்பதில்லை; கிரீடம் செய்யும்போது மட்டும் பசை உபயோகிப்போம். அதனால், கிரீடம் தவிர நாங்கள் செய்கிற மற்ற மாலைகளில் இருக்கும் நட்ஸ், பழங்கள், ஏலக்காய் எல்லாவற்றையும் சமையலுக்கு பயன்படுத்தலாம். மாலை கோர்க்க நாங்கள் உபயோகிப்பது ஊசியும், பருத்தி நுால்களும் தான்.
மாலைகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதால், 'பேக்' செய்யும்போது கவனமாக இருப்போம். நாங்கள் அனைவருமே கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என ஆரம்பித்த தொழில், இன்று அதுகுறித்தே யோசித்து, அது பின்னாடியே ஓடும் அளவுக்கு எங்களை பிசியாக வைத்திருக்கிறது.
தொடர்புக்கு:
90807 06012