/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
பாதியில் நிற்கும் பாலம் பணி; விபத்து ஏற்படும் அபாயம்
/
பாதியில் நிற்கும் பாலம் பணி; விபத்து ஏற்படும் அபாயம்
பாதியில் நிற்கும் பாலம் பணி; விபத்து ஏற்படும் அபாயம்
பாதியில் நிற்கும் பாலம் பணி; விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜூன் 09, 2025 09:49 PM

பூங்காவை பராமரியுங்க
உடுமலை ஸ்ரீநகரில் நகராட்சி பூங்கா உள்ளது. இப்பூங்கா பராமரிப்பு இல்லாததால், பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால், குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பூங்காவை பராமரிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கதிரேசன், உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, காந்திநகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செய்வதற்கும் அச்சப்படுகின்றனர்.
- செல்வி, உடுமலை.
ரோட்டை சீரமையுங்க
உடுமலை, அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் அரசு ஆண்கள் விடுதி அருகே ரோடு பள்ளமாகியுள்ளது. கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது ரோடு மேலும் குழியாகி மழை நாட்களில் மழைநீரும் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் மாணவர்களும் குழியில் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
- ராஜ்குமார், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, தளிரோட்டில் வாகனங்கள் விதிமுறை பின்பற்றாமல் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. மாலை நேரங்களில் தளி ரோட்டில் விதிமுறை மீறும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் நடந்துசெல்வதற்கும் இடையூறாக உள்ளது.
- பழனிச்சாமி, உடுமலை.
பணிகளை விரைந்து முடியுங்க
உடுமலை -- திருப்பூர் ரோட்டில் நான்கு வழி சாலைக்காக பாலம் அமைக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
மரக்கிளையை அகற்றணும் !
வால்பாறை நகரில் இருந்து, நடுமலை எஸ்டேட் செல்லும் ரோட்டின் ஓரத்தில் மரக்கிளை சாய்ந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதால், சாய்ந்த மரக்கிளையை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- தர்ஷன், வால்பாறை.
திறந்த வெளியில் குப்பை
உடுமலை, சிவலிங்கம் பிள்ளை லே-அவுட் பகுதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. கழிவுகள் தேங்கி மிகுதியான துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. கழிவுகளை எடுப்பதற்கு தெருநாய்களும் அதிக எண்ணிக்கையில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வனிதா, உடுமலை.
சிக்னல் அமைக்கணும்
கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில் தாறுமாறாக வாகனங்கள் சென்று வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இங்கு விரைவில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கார்த்தி, கிணத்துக்கடவு.
பள்ளி அருகே குப்பை
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி எதிரே ரோட்டோரம் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு சென்று வரும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பையை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- டேவிட், பொள்ளாச்சி.
குப்பைத்தொட்டி தேவை
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை அரசம்பாளையம் பிரிவு அருகே, சர்வீஸ் ரோடு முடியும் இடத்தில் ரோட்டோரம் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் போது, காற்றுக்கு குப்பை பரந்து வாகன ஓட்டுநர்கள் மீது விழுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, இப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.
- ரூபன், கிணத்துக்கடவு.
வெள்ளை பட்டையால் அபாயம்
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், பல இடங்களில் விபத்தை தவிர்க்கிறோம் என்ற பெயரில், நெடுஞ்சாலை துறையினர் தொடர் வெள்ளை பட்டை அமைத்துள்ளனர். இதில், இருசக்கர வாகனங்கள் மற்றும் சாதாரண கார்கள் அப்பகுதியில் பலத்த அதிர்ப்புக்கு உள்ளாகின்றன. இதனால், வாகனத்தில் செல்லும் வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் பாதிக்கின்றனர். வெள்ளை பட்டை தடிமனை குறைக்க வேண்டும்.
- விஸ்வநாதன், பொள்ளாச்சி.
வீணாகும் மின்கம்பம்
கிணத்துக்கடவு, காணியாலம்பாளையத்தில் ரோட்டோரம் துருப்பிடித்த நிலையில், இரும்பு மின் கம்பம் குப்பை போன்று போடப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்வோர், ஒயர்களை எடுத்து செல்வதற்குள் மின்வாரிய அதிகாரிகள், இதை கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- மோகன், கோவில்பாளையம்.