/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
கணபதி ஆர்.கே.புரம் தெருக்களில் கழிவு நீரோட்டம்; பொதுமக்களால் தாங்க முடியவில்லை துர்நாற்றம்
/
கணபதி ஆர்.கே.புரம் தெருக்களில் கழிவு நீரோட்டம்; பொதுமக்களால் தாங்க முடியவில்லை துர்நாற்றம்
கணபதி ஆர்.கே.புரம் தெருக்களில் கழிவு நீரோட்டம்; பொதுமக்களால் தாங்க முடியவில்லை துர்நாற்றம்
கணபதி ஆர்.கே.புரம் தெருக்களில் கழிவு நீரோட்டம்; பொதுமக்களால் தாங்க முடியவில்லை துர்நாற்றம்
ADDED : ஜூன் 29, 2025 11:59 PM

துரத்தும் நாய்கள்
பொன்னையராஜபுரம், ராஜம்மாள் லே- அவுட், ஆவின் பூத் அருகே பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சாலையில் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி கடிக்கின்றன. முதியவர்கள், குழந்தைகள் சாலையில் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர்.
- விக்னேஷ், பொன்னையராஜபுரம்.
சாலையில் ஓடும் குதிரைகள்
துடியலுார் அருகே ஜி.என்.மில்ஸ் முதல் கே.என்.ஜி.புதுார் சாலையில் குதிரைகள் அதிகளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. சாலையில் அங்கும், இங்கும் ஓடி விளையாடுகின்றன. திடீரென குறுக்கே ஓடுவதால், வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- சந்தர், கே.என்.ஜி.புதுார்.
அத்துமீறும் 'குடி'மகன்கள்
வடவள்ளி, 39வது வார்டு, சிறுவாணி ரோடு, கீர்த்தி நகரில், கம்பத்தில் தெருவிளக்கு ஒரு வருடத்திற்கு முன்பு பொருத்தப்பட்டது. ஆனால், தெருவிளக்கிற்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. இருளை பயன்படுத்தி அருகில் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் சிலர், குடியிருப்பு பகுதியிலேயே மது அருந்துகின்றனர்.
- தினேஷ்குமார், கீர்த்தி நகர்.
காய்ச்சல் பாதிப்பு
கணபதி, 19வது வார்டு, ஆர்.கே.புரம், கிருஷ்ணா திருமண மண்டபம் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், கடும் துர்நாற்றமும், கொசுப்பெருக்கமும் அதிகமாக உள்ளது. சுகாதார சீர்கேட்டால் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- சிவசங்கர், கணபதி.
இருளால் அச்சம்
சுங்கம் அருகே, 84வது வார்டு, ஆல்வின் நகரில், 'எஸ்.பி - 31 பி-1' என்ற எண் கொண்ட கம்பத்தில் பல நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. கடும் இருளால் இரவு, 7:00 மணிக்கு மேல் பெண்கள், முதியவர்கள் வெளியே செல்ல முடியவில்லை. பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் தெருவிளக்கை மாற்றித் தர வேண்டும்.
- ஜெரிஷ், சுங்கம்.
சேறும், சகதியுமான ரோடு
வேடப்பட்டி மெயின் ரோடு, கால்நடை மருத்துவமனை அருகே சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சேறும், சகதியுமான சாலையில் வாகனங்கள் அடிக்கடி மாட்டிக்கொள்கின்றன. வாகனங்கள் செல்லவும், பாதசாரிகள் நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது.
- உன்னிகிருஷ்ணன், வேடப்பட்டி.
ஒயர்களில் உரசும் கிளைகள்
சேரன்மாநகர், சிறுவர் பூங்கா அருகே உள்ள பெரிய மரத்தின் கிளைகள், மின்ஒயர்களில் உரசும்படி உள்ளது. மழைக்காலங்களில் வேகமாக காற்றடிக்கும் போது, கிளைகள் மின்ஒயர்களில் உரசுவதால் மின்தடை ஏற்படுகிறது. மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
- ராஜேஷ்குமார், சேரன்மாநகர்.
சுத்தம் செய்து வருஷமாச்சு
வெள்ளலுார், இ.வி.பி., பிரசிடெண்ட் காலனி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய், பல வருடங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. கால்வாயே தெரியாத அளவிற்கு இருபுறமும் புதர்செடிகள் வளர்ந்துள்ளன. கால்வாயில் மண் அதிகளவு சேர்ந்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றமும், சுகாதாரமின்றியும் உள்ளது.
- ஸ்ரீமதி, வெள்ளலுார்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
சிறுவாணி மெயின் ரோடு, காளம்பாளையம் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றப்பட்டது. அப்போது, சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டது. இதனால், கழிவுநீர் குழியில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகளவில் உள்ளது.
- ரத்தினசாமி, காளம்பாளையம்.
தெருவிளக்கு பழுது
பொன்னையராஜபுரம், 73வது வார்டு, ராஜம்மாள் லே அவுட் ஆவின் பால் பூத் அருகே, 'எஸ்.பி - 38, பி -12' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. தெருவிளக்கு பழுதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
- விக்னேஷ், பொன்னையராஜபுரம்.