UPDATED : செப் 06, 2026 05:37 PM
ADDED : செப் 06, 2026 05:30 PM

1. டிரான்ஸ்பார்மர் மீது குவிந்த குப்பை ராம்நகர், பி.எஸ்.ஆர். சில்க்ஸ் கிராஸ்-கட் ரோடு எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரின் கீழ் மரப்பலகைகள், அட்டைப் பெட்டிகள் மற்றும் குப்பை நீண்ட நாட்களாக குவிந்துள்ளன.
-வெங்கடேஷ்: 2. பொது இடங்களில் குப்பை கணபதி குமரன் நகரில் மாநகராட்சி ஊழியர்கள் பொது வெளியில் கழிவுப் பொருட்களை கொட்டுகின்றனர். அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
-முத்துசாமி: 3. குப்பை சேகரிக்காததால் துர்நாற்றம் கஸ்தூரிநாயக்கன்பாளையம், வனப்பிரஸ்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் இருந்து குப்பை சேகரிக்கப்படுவதில்லை. ரோட்டோரம், காலி மனைகளில் கொட்டப்படுகிறது.
-சுஷாந்து பாஸ்கரன்: 4. ஒளிரா விளக்கு வீரகேரளம், பொங்காளியூர் ரோடு, அரவிந்த் கார்டனில் மூன்று மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இர வில் மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
-சிவக்குமார்: 5. சாலை தேவை வெள்ளக்கிணறு, சவுடாம்பிகா நகரில் ரோடு அமைக்க ஓராண்டுக்கு முன் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது;ரோடு போடவில்லை.
- வரதராஜ்: 6. எரியாத விளக்கு வடவள்ளியில் சில நாட்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் நடக்க முடியவில்லை. சமூக விரோத செயல்கள் அதிகரிக்க இது காரணமாகிறது.
- சுரேஷ்: 7. நடைபாதை ஆக்கிரமிப்பு கவுண்டம்பாளையம், மேற்கு மண்டல மாநகராட்சி வார்டு எண் 5-ல் நடைபாதையை கடைகள், பொருட்கள் வைத்து ஆக்கிரமித்துள்ளதால், நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.
- முருகநன்தம்: 8. ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி நரசிம்மநாயக்கன்பாளையம் டீச்சர் காலனி முதல் தெருவில் இருந்து, ரங்கா காலனிக்கு செல்லும் நடைபாதை தடுப்புச் சுவர் அமைத்தும், வாகனங்களை நிறுத்தியும் மறிக்கப்பட்டுள்ளது.
- ரங்கசாமி: 9. நாய் தொல்லை வெள்ளலுார், காந்திநகர், மகா கணபதி நகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிகரித்துள்ளன. தெருவில் நடமாட அச்சம் ஏற்படுகிறது. இரவில் நடந்து செல்வோரை துரத்துகின்றன.
- மனோகரன்:
