ADDED : ஜூன் 28, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் விளக்குகள் இன்றி அச்சம்
திருக்கோவிலுார், புறவழிச்சாலை உயர்மட்ட பாலத்தில் மின் விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
-ராமன், திருக்கோவிலுார்.
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள்
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதையில் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாந்த், கள்ளக்குறிச்சி.
உலர்களமான சர்வீஸ் சாலை
தச்சூர் அருகே சர்வீஸ் சாலைகளில் விவசாய விளை பொருட்களைக் கொட்டி உலர்களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
-ஹரிஹரன், கள்ளக்குறிச்சி.
பள்ளி முன் கடைகள் ஆக்கிரமிப்பு
திருக்கோவிலுார் அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி வாயில் எதிரே நடைபாதைக் கடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணபிரதாப் சிங், மணம்பூண்டி.