/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; சேதமடைந்த கம்பங்கள் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 18, 2025 09:19 PM

சேதமடைந்த கம்பங்கள் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
திருத்தணி தாலுகா நாபளூர் கிராமத்தில் இருந்து ராமபுரம் செல்லும் சாலையில், பனைமரம் தோப்பு அருகே மின்மாற்றி அமைத்து, அதிலிருந்து விவசாய மின் மோட்டார்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தெரு விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
முறையாக மின்மாற்றியின் மின்கம்பங்களை பராமரிக்காததால் சேதமடைந்துள்ளன. கம்பத்தின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்தும், விரிசல் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இரும்பு கம்பிகளும் துருப்பிடித்துள்ளதால், மின்கம்பம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.வெங்கடேசன், நாபளூர்.