PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி,:திண்டுக்கல்மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி அடுத்த சோழகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மூத்த மகன் தேவ சங்கிலி 30. கட்டடத் தொழிலாளி.
இவருக்கு அபிராமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
இவரது தம்பி ஹரிஹரன் 24. இவர்கள் சோழகுளத்துபட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்தனர். நேற்று இரவு அண்ணன், தம்பி இடையே மதுபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஹரிஹரன், அரிவாளால் தேவசங்கிலியை வெட்டியதில் அவர் உயிரிழந்தார்.
பின்னர் ஹரிஹரன் சாணார்பட்டி போலீசில் சரணடைந்தார். மேல்விசாரணை நடக்கிறது.