PUBLISHED ON : ஏப் 02, 2026 12:01 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக ஆட்டிசம் தினம்
ஆட்டிசம் என்பது
குழந்தையின் மூளை நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. 100ல்
ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது. உலகில் 6.10 கோடி பேர் 'ஆட்டிசம்'
பாதித்தவர்கள். குழந்தையின் 10 - 18 மாதங்களில் பாதிப்பை கண்டறிய முடியும்.
இவர்கள் தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன்
போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். ஒரே மாதிரி விஷயங்களைத் திரும்ப
திரும்பச் செய்வர். ஐ.நா., சார்பில் ஏப். 2ல் உலக ஆட்டிசம் தினம்
கடைபிடிக்கப்படுகிறது. 'ஆட்டிசம், மனித நேயம் - ஒவ்வொரு உயிருக்கும்
மதிப்பு உண்டு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.





