Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/காற்றால் ஏற்பட்ட கணக்கு பிழை

காற்றால் ஏற்பட்ட கணக்கு பிழை

காற்றால் ஏற்பட்ட கணக்கு பிழை


PUBLISHED ON : மே 14, 2026 08:05 AM

Follow on Google

PUBLISHED ON : மே 14, 2026 08:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரு நுாற்றாண்டுகளுக்கும் மேலாக இயற்பியலாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு மர்ம எண் உண்டு. அதுதான் 'புவியீர்ப்பு விசை மாறிலி.' ஒளியின் வேகம், பிளாங்க் மாறிலி போன்ற இயற்கை மாறிலிகளைத் துல்லியமாக அளவிட முடிந்த விஞ்ஞானிகளால், 'ஜி' என்று குறிப்பிடப்படும் புவியீர்ப்பு மாறிலியை மட்டும் துல்லியமாக அளந்து சொல்ல முடியவில்லை.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள தேசியத் தரநிலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIST), கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில் இதற்கு ஒரு விடையை கண்டுள்ளது. அதீத உணர்திறன் கொண்ட கருவிகளைப் பயன்படுத்தியும்கூட, வெவ்வேறு இடங்களில் உள்ள புவியீர்ப்பு ஆய்வகங்களின் முடிவுகள் ஏன் மாறுபடுகின்றன என்பதை அவர்கள் ஆராய்ந்தனர். கடைசியில், ஆய்வுக்குப் பயன்படும் 'வெற்றிடக் குழாய்களில்' எஞ்சியிருக்கும் மிகச்சிறிய அளவிலான காற்றுத் துகள்களே இந்த அளவீடுகள் மாறுவதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அண்டவெளியில், கோள்களையும் விண்மீன் திரள்களையும் சுண்டி இழுத்து சுற்றவைக்கும் இந்த ஈர்ப்பு விசை என்ற பேராற்றலை, நவீன அறிவியல் குறைவான துல்லியத்துடனேயே இன்றும் அளவிடுகிறது என்பது ஒரு முரண்பாடுதான். இந்த அளவீடுகளை துல்லியப்படுத்துவது விண்வெளி ஆய்வு, பிரபஞ்சவியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் ஆகியவற்றின் எதிர்காலத்தையே சற்று மாற்றக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap