தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

01. இறைச்சிக்காக ஆடு, பன்றி, கோழி, மாடுகளை வளர்ப்பது சுற்றுச்சூழலுக்குப் பலவித தீமைகள் செய்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மக்குவாரி பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மலைப்பாம்புகளை இவ்வாறு வளர்த்து உண்பது பல வழிகளில் நன்மை செய்யும் என்று தெரியவந்துள்ளது. விவசாயத்திற்குத் தொல்லை தரும் உயிரினங்களை உட்கொள்வதாலும், அவற்றின் மாமிசத்தில் அதிகளவு புரதம் இருப்பதாலும் விஞ்ஞானிகள் மலைப்பாம்பு உணவைப் பரிந்துரைக்கின்றனர்.

02. பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு பயன்பாடுகளை உடையது அதிமதுரம் (Licorice). இதிலிருந்து பல இனிப்புகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள க்ளைசைர்ஹிசிக் அமிலம், ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் என சுவீடன் நாட்டைச் சேர்ந்த லின்கோபிங்க் பல்கலை சமீபத்திய மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு 57 கிராமிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது ஆபத்து என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Image 1247618


03. ஆஸ்திரேலியாவின் கேர்ட்டின் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் புறநகர்களில் வசிக்கும் குழந்தைகளை விட நகர மத்தியில் வசிக்கும் குழந்தைக்கு மிக அதிகமாக ஆஸ்துமா நோய் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நகரங்களில் ஏற்படும் கடுமையான காற்று மாசு ஆகும்.

04. எலியின் சிதிலமடைந்த தோலின் மீது 3டி பிரின்டிங் முறையில் உயிருள்ள தோலைப் பொருத்தி அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். விரைவில் இது மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளனர்.

Image 1247619


05. செவ்வாய் கிரகத்தில் மரைனர் 9 விண்கலம் மட்டுமே இதுவரை 20 எரிமலைகளைக் கண்டறிந்துள்ளது. தற்போது புதிதாக ஒரு எரிமலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 9,022 மீ. உயரத்தில் இருக்கும் இந்த எரிமலை 450 கி.மீ. அகலம் உடையது. இதற்குக் கீழே உறைபனி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us