Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. தென் கிழக்கு சீனாவில் ஆற்றில் வாழும் ஒரு புதிய மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 4 அங்குல நீளமுடைய இந்த மீன்கள் பெரிய கண்களும், மூன்று வரிசை பற்களும், பளபளப்பான வெள்ளி நிறச் செதில்களும் கொண்டுள்ளன. இதற்கு 'ஹைனானியா மின்ஜெங்கி' என்ற விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Image 1456026


2. பூமியில் இருந்து 10 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது NGC 1309 கேலக்ஸி. இதன் மொத்த விட்டம் 75,000 ஒளியாண்டுகள். இதை ஹப்பிள் தொலைநோக்கி மிக அழகாகப் படம் எடுத்துள்ளது.

Image 1456027


3. வெள்ளி, வியாழன் என இரு கோள்கள் ஆகஸ்ட் 12 முதல் 20ஆம் தேதி வரை அருகருகே தெரிய உள்ளன. ஆகஸ்ட் 19 அன்று பிறை நிலா இவற்றுடன் இணைந்து முக்கோணமாக அழகாகத் தெரிய உள்ளன.

Image 1456028


4. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தெற்கு அட்லான்டிக் கரையை ஒட்டி சமீபத்தில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஊன் உண்ணும் கடற்பஞ்சு, பவளப்பாறை, வித்யாசமான நட்சத்திர மீன் உள்ளிட்ட 40 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Image 1456029


5. நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள மின்சாரம் தேவை. இதை உற்பத்தி செய்யும் வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு மின் நிலையத்தை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதிலிருந்து 100 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap