Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!


PUBLISHED ON : ஜூன் 11, 2026 07:22 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2026 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சிறிய கியூப்சாட் (CubeSat) செயற்கைக்கோள்கள் இனி விண்வெளியில் வெகுதுாரம் பயணிக்க முடியும். அதற்கு, அமெரிக்காவின் எம்.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள கட்டைவிரல் அளவிலான உந்துவிசை இயந்திரம் உதவும். இந்த குட்டி உந்திகள் செயற்கைக்கோளின் எடையையும் சிக்கல்களையும் குறைப்பதால், நிலா மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களை வெகுநாட்கள் வலம் வந்து ஆய்வுகளை செய்ய முடியும்.

Image 1586727


2. கட்டட இடிபாடுகள் பெரும் சூழல் கேட்டை உருவாக்குகின்றன. இதைத் தடுக்க ஆஸ்திரியாவின், கிராஸ் தொழில்நுட்பப் பல்கலை ஆய்வாளர்கள், லெகோ (Lego) கட்டைகளைப் போல எளிதாக சேர்த்துப், பிரித்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய செங்கற்களை உருவாக்கியுள்ளனர். கட்டட இடிபாடுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கிய இந்த லெகோ செங்கற்கள் சிமென்டால் ஒட்டப்படுவதில்லை. கட்டடக் கழிவுகள் குறைவதோடு, கட்டடச் செலவும் குறையும்.

Image 1586729


3. நெடுதுார விண்வெளிப் பயணங்களின் போது விண்வெளி வீ ரர்களுக்கு தசை மற்றும் எலும்பு இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதை தடுக்க, அடிலெய்ட் மற்றும் நாட்டிங்ஹாம் பல்கலை விஞ்ஞானிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ' ஸ்பேஸ் ஸ்மூத்தி'களை உருவாக்கியுள்ளனர்.

Image 1586730


4. சிலவகை சிலந்திகளுக்கு தனித்துவமான பார்வைத் திறன்கள் உண்டு. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, முப்பரிமாண (3D) கேமிராக்களை உருவாக்க ஆக்ஸ்போர்டு மற்றும் ஷெபீல்டு பல்கலை ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். இதன் வாயிலாக, ரோபோக்கள், டிரோன்கள் மற்றும் தானோட்டி வாகனங்களுக்கான, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் அதிநவீன கேமராக்களை உருவாக்கலாம்.

Image 1586731


5. சூரிய ஒளியைப் பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடை திரவ எரிபொருளாக மாற்றும் 'செயற்கை இலை' ஒன்றை கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இயற்கை ஒளிச்சேர்க்கை முறையைப் பின்பற்றும் இத்தொழில்நுட்பம், வளிமண்டல பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பதுடன், துாய்மையான மற்றும் நிலையான எரிபொருட்களை உற்பத்தி செய்ய எளிய வழியையும் வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap