Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/வீட்டு வேலைக்கு வரும் 'ஸ்ட்ரெட்ச் 4' ரோபோ

வீட்டு வேலைக்கு வரும் 'ஸ்ட்ரெட்ச் 4' ரோபோ

வீட்டு வேலைக்கு வரும் 'ஸ்ட்ரெட்ச் 4' ரோபோ

1


PUBLISHED ON : மே 21, 2026 07:09 AM

Follow on Google

PUBLISHED ON : மே 21, 2026 07:09 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீ டுகளில் உதவி செய்யும் ரோபோக்களை உருவாக்க ஆய்வு செய்து வருகிறது அமெரிக்காவின் 'ஹலோ ரோபோ.' அண்மையில் அதன் ஆய்வாளர்கள், 'ஸ்ட்ரெட்ச் 4' என்ற சக்கரத்தால் நகரும் ரோபோவை அறிமுகம் செய்துள்ளனர். வேண்டுமென்றே மனித வடிவத்தை இவர்கள் தவிர்த்துள்ளனர். ஸ்ட்ரெட்ச் 4 ரோபோ, சமையலறை, படுக்கையறை மற்றும் குறுகலான நடைபாதைகளில் எளிதாக நகர்கிறது. பொருட்களை எடுப்பது, கதவுகளைத் திறப்பது போன்ற வீட்டு வேலைகளுக்கு உதவும் வகையில் இதற்கு ஒரு ரோபோ கரமும் உண்டு.

மனிதர்களைப் போலவே இரு கால்கள், இரு கரங்கள் போன்றவை தவிர்க்கப்பட்டதால், இது இலகுரக உடலமைப்பைக் கொண்டுள்ளது. சக்கரங்களின் மேல் பொருத்தப்பட்ட, மேடை மற்றும் சற்று உயரமான கம்பம் ஆகியவற்றோடு, நீளக்கூடிய ஒரு கையும் இந்த ரோபோவுக்கு உள்ளது. இதிலுள்ள உணரிகளின் உதவியுடன், பொருட்கள் நிறைந்து கிடக்கும் வீட்டுச் சூழலிலும் எளிதாக ஊர்ந்து செல்கிறது. சில தொழிற்சாலை ரோபோக்களைப் போல, முரட்டுத் தோற்றம் இதற்கு இல்லை. சாதாரண வீடுகளுக்குப் பொருந்தும் வகையில் இதை மென்மையானதாகவும், தேவையான ஆற்றல் மிக்கதாகவும், கச்சிதமானதாகவும் பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

அங்கே பொருட்கள் இடம் மாறுவது, வெளிச்சம் வேறுபடுவது, மனிதர்க ளின் நடமாட்டம் எனத் தொடர்ந்து மாற்றங்கள் நிகழும். எனவே, ஸ்ட்ரெட்ச் 4 ரோபோ, காலப்போக்கில் வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்ப செயல்படுவதற்காக, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. மேலும், ஹலோ ரோபோவின் பொறியாளர்கள் அவ்வப்போது மென்பொருள் மேம்படுத்தல்களை இணையத் தொடர்பின் (Wi-Fi) வாயிலாகவோ அல்லது ஸ்மார்ட்போன் செயலியின் வாயிலாகவோ அனுப்பி வைப்பர்.

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மலிவு விலை வீட்டு ரோபோக்கள் சிறந்த உதவியாளர்களாக இருக்கும் என்கின்றனர் இதன் படைப்பாளிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap