sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

சினிமா ர(ரு)சிக்கும் நளபாக நாயகன்!

/

சினிமா ர(ரு)சிக்கும் நளபாக நாயகன்!

சினிமா ர(ரு)சிக்கும் நளபாக நாயகன்!

சினிமா ர(ரு)சிக்கும் நளபாக நாயகன்!


PUBLISHED ON : ஜன 15, 2024

Google News

PUBLISHED ON : ஜன 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இவரது கை ருசிக்கு பிரபலங்கள் ரசிகர்கள். இவரிடம் தேதி வாங்கிதான் முகூர்த்த நாளையே குறிக்கிறார்கள். 'சமையல்காரர்தானே' என்ற ஏளனத்தை உடைத்து அதுவும் ஒரு கார்ப்பரேட் தொழில் என நிரூபித்தவர். சிங்கப்பூருக்கு சென்று இவர் சமையல் செய்ய நேரம் இல்லாததால், அங்கிருந்து விமானம் பிடித்து கோவைக்கு வந்து திருமணம் செய்தவர்களும் உண்டு. அப்படி என்னதான் கை பக்குவம் மாதம்பட்டி ரங்கராஜிடம்... இதோ அவரே ருசியாக பேசுகிறார்.

''அப்பா மாதம்பட்டி தங்கவேல்னா எல்லோருக்கும் தெரியும். 1983ல் அம்மா கை பக்குவத்துல 'லட்சுமி கேட்டரிங் சர்வீஸ்'னு ஆரம்பிச்சாரு. ஜி.கே. மூப்பனார் வீட்டுத் திருமணங்களுக்கு அப்பாதான் சமையல். சினிமா தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமார் மூலம் அப்பாவுக்கு சினிமா படப்பிடிப்புகளில் சமையல் வேலை கிடைத்தது. எனக்கும் சினிமா தொடர்பு ஏற்பட்டது. 22 ஆண்டுகளாக கேட்டரிங் தொழிலில் உள்ளேன்.

நான் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்திருந்தாலும் கேட்டரிங் மீது ஆர்வம். அப்பா என் ஆசைக்கு தடைபோடலை. கேட்டரிங் படிக்க ஆரம்பித்தேன். கோவையில் ஒரு ஓட்டலில் எப்படி சர்வீஸ் செய்வது என கற்றுக்கொண்டேன். 5 ஆண்டுகள் சமையல் நுட்பங்களை அப்பா கற்றுக்கொடுத்தார். அந்த கற்றல்தான் எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் சமாளிக்கும் தன்மையை கொடுத்தது.

முதன்முதலாக திருப்பூரில் 10 ஆயிரம் பேருக்கு கேட்டரிங் செய்தேன். கரூரில் சைதை துரைசாமி வீட்டு திருமணத்திற்கு 10 ஆயிரம் பேர் என எதிர்பார்த்து 15 ஆயிரம் பேர் வந்தனர். சலனமின்றி சமாளித்தோம். அதை கேள்விபட்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேத்தி திருமணத்திற்கு அழைத்தார். அரசியல் தலைவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தனர்.

நடிகர் கார்த்தி திருமணத்திற்கு கேட்டரிங் செய்த பிறகு, திரைஉலகின் பார்வை என் பக்கம் திரும்பியது. இன்று பலரும் என்னை விருப்பப்பட்டு அழைப்பது என் தொழிலுக்கு கிடைத்த வெற்றி.

உணவுத்தொழிலை அர்ப்பணிப்போடு செய்பவர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் மாதம்பட்டி கோல்டன் லீப் விருதை 9 பேருக்கு கடந்தாண்டு முதன்முறையாக கொடுத்தேன். என்னிடம் மெயின் சமையல் கலைஞர்கள் 40 பேர். தேவைக்கு ஏற்ப வெளி ஆட்களை அழைத்துக்கொள்வோம். அதேசமயம் ருசியில் மாற்றம் இருக்காது. கோவை, பெங்களூருவில் கேட்டரிங் யூனிட் அமைத்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உணவு சப்ளை செய்கிறோம்.எங்கள் ஸ்பெஷல் எண்ணெய் கத்திரி குழம்பு, கொய்யா சட்னி. ஒவ்வொரு ஊரிலும் உணவில் என்னென்ன ஸ்பெஷல் உள்ளதோ அதை கொண்டு வருவது எங்களது ஸ்பெஷல். ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை உணவு பட்டியல் மாறும்.

நடிகர் சண்முகராஜாவிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன். ஆண்டுக்கு ஒரு படம் தயாரித்து நடித்து வருகிறேன். இதுவரை மெகந்தி சர்க்கஸ், பென்குயின் படங்களில் நடித்துள்ளேன்.

தமிழ்ப்புத்தாண்டு அன்று டில்லி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருக்காக தென்னிந்திய உணவுகளை தயாரித்தோம். சமைப்பது முதல் பரிமாறுவது வரை அவ்வளவு 'புரோட்டாகால்'. சமையல்கூடத்தில் துப்பாக்கி பாதுகாப்பு வேறு. மறக்கவே முடியாது'' என சுவையுடன் பேசி முடித்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.

எங்கள் ஸ்பெஷல் எண்ணெய் கத்திரி குழம்பு, கொய்யா சட்னி. ஒவ்வொரு ஊரிலும் உணவில் என்னென்ன ஸ்பெஷல் உள்ளதோ அதை கொண்டு வருவது எங்களது ஸ்பெஷல்.






      Dinamalar
      Follow us