
ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு விதமாக பலன் தருகிறது. முருங்கை, பசலைக்கீரை உட்பட பல வகைகள் உள்ளன. அதில் சிலவற்றை பார்ப்போம்...
சக்கரவர்த்திக்கீரை: குளிர்காலத்தில் அதிகமாக விளையும். சுவையில் அபாரமாக இருக்கும். வைட்டமின், கால்ஷியம், இரும்பு, மெக்னீஷியம் சத்துகள் அதிகம் உள்ளன. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
ஆரைக்கீரை: வாய்க்கால் ஓரங்களில் வளரும். இதை துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
வெந்தயக்கீரை: தாது உப்புக்களும், வைட்டமின் சத்துகளும் நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெந்தயக் கீரையை அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரத்துக்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முக வறட்சி மறையும்.
சிறுகீரை: இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். குடல் புண்களை ஆற்றவும் உதவுகிறது.
முளைக்கீரை: இரும்பு, சுண்ணாம்பு சத்து அதிகம் உடையது. தொடர்ந்து சாப்பிட்டால் கண்களுக்கு குளிர்ச்சியை தரும்.
பருப்புக்கீரை: கால்ஷியம் சத்து நிறைந்தது. வைட்டமின் ஏ, சி மற்றும் பி சத்தும் நிறைந்துள்ளது.
- தஷ்வந்த்