sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2024 மார்ச் - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

/

2024 மார்ச் - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2024 மார்ச் - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2024 மார்ச் - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2025

Google News

PUBLISHED ON : ஜன 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

மார்ச்8: வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு.

மார்ச்14: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு.

மார்ச்22: அமைச்சர் பொன்முடியின் மூன்றாண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைப்பு. மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சரானார்.

மார்ச்27: ஈரோடு ம.தி.மு.க., எம்.பி., கணேசமூர்த்தி விஷம் குடித்து தற்கொலை.

ஏப்.4: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 35 ஆண்டுக்குப்பின் இலங்கை சென்றனர்.

ஏப்.6: விக்கிரவாண்டி, தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தி 71, காலமானார்.

ஏப். 7: சென்னை - நெல்லை ரயிலில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 4 கோடி சிக்கியது.

ஏப்.19: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.

ஏப்.30: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சாத்துார் விரைவு நீதிமன்றம்.

இந்தியா

மார்ச்9: இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா.

*சர்வதேச போதை கடத்தல் வழக்கில் தி.மு.க., பிரமுகரான ஜாபர் சாதிக், டில்லியில் கைது. கட்சியில் இருந்து நீக்கம்.

மார்ச்10: மும்பையில் நடந்த உலக அழகி போட்டியில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டம் வென்றார்.

மார்ச்12: ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப்சிங்சைனி பதவியேற்பு.

மார்ச்14: தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பா.ஜ., ரூ.6000 கோடி, காங்., ரூ.1421 கோடி, தி.மு.க., ரூ.639 கோடி நிதி பெற்றன.

*தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு.

*புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய்க்கு தடை.

மார்ச்19: புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார்.

மார்ச்21: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால் கைது.

ஏப்.3: குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ., வில் சேர்ந்தார்.

ஏப்.16: சத்தீஸ்கரின் கெங்கரில் 29 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை.

ஏப்.21: 'துார்தர்ஷன்' சேனலுக்கு காவி நிற புதிய லோகோ.

ஏப்.23: மேற்கு வங்கத்தில் முறைகேடு காரணமாக 26 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செல்லாது என கோல்கட்டா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஏப்.26: ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏப்.30: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ரேவண்ணா, ம.ஜ.த., கட்சியிலிருந்து சஸ்பெண்ட்.

உலகம்

மார்ச்1: பின்லாந்து பிரதமராக அலெக்ஸாண்டர் ஸ்டுப் பதவியேற்பு.

*வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடத்தில் தீ. 47 பேர் பலி.

மார்ச்3: பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பு.

மார்ச்4: கருக்கலைப்பு அவரவர் உரிமை என பிரான்சில் சட்டம் நிறைவேற்றம்.

மார்ச்7: 'நேட்டோ' அமைப்பில் 32வது நாடாக இணைந்தது சுவீடன்.

மார்ச்13: உலகின் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்ப பாதுகாப்பு சட்டம் ஐரோப்பிய யூனியனில் நிறைவேற்றம்.

மார்ச்20: மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம்.

மார்ச்23: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஐ.எஸ்., அமைப்பு தாக்குதல். 144 பேர் பலி.

மார்ச்24 : பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் பாதிப்புக்காக 'கீமோதெரபி' சிகிச்சை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

ஏப்.1: காங்கோவின் முதல் பெண் பிரதமராக ஜூடித் துலுகா பதவியேற்பு.

ஏப்.2: எகிப்து அதிபராக அப்டெல் படாஹ் அல் சசி, மூன்றாவது முறையாக பதவியேற்பு.

*போர்ச்சுக்கல் பிரதமராக லுாயிஸ் மான்டெங்ரோ பதவியேற்பு.

ஏப்.4: வெனிசுலாவை சேர்ந்த உலகின் வயதான ஜூவான் விஜென்டி பெரெஷ் மோரா 114, காலமானார்.

ஏப்.11: அயர்லாந்து பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்பு.

ஏப்.13: இந்தியாவுக்கான பிரிட்டன் முதல் பெண் துாதராக லின்டி கேமரான் பதவியேற்பு.

ஏப்.29: உலகில் நீண்டகாலம் (20 ஆண்டு) பதவி வகிக்கும் பெண் பிரதமரானார் வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா.

ஓட்டலில் குண்டு

மார்ச்1: பெங்களூருவின் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவெடிப்பு. 8 பேர் காயம்

புதுமை பயணம்

மார்ச்5 : நீருக்கு அடியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து கோல்கட்டாவில் துவக்கம்.

இணைப்பு

மார்ச்12: சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பா.ஜ.,வுடன் இணைந்தது.

நொறுங்கிய பாலம்

மார்ச்26: சரக்கு கப்பல் மோதியதில் அமெரிக்காவின் பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் விழுந்தது. அதன் மேல் சென்ற வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதில் 9 பேர் பலி.

சென்னை மாணவர்

மார்ச்27: மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்பேஸ் பிரிவுக்கு தலைவராக சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் பவன் டவுலுாரி பதவியேற்பு.

டாப் - 3

மார்ச் 5: கல்பாக்கத்தில் ஈணுலை உற்பத்தியை பிரதமர் மோடி துவக்கினார்.

மார்ச் 11: இந்திய குடியுரிமை சட்டம் (சி.ஏ.ஏ., ) அமலுக்கு வந்தது.

மார்ச் 15: ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக பதவியேற்பு.






      Dinamalar
      Follow us