sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2024ல் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்

/

2024ல் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்

2024ல் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்

2024ல் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2025

Google News

PUBLISHED ON : ஜன 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.26: ஐதராபாத்தின் தன்மே அகர்வால், முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக (147 பந்து, எதிர்: அருணாச்சல பிரதேசம்) முச்சதம் விளாசி சாதனை.

ஜன.27: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் பெலாரசின் சபலென்கா சாம்பியன்.

*ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டென் ஜோடி சாம்பியன்.அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரரானார் போபண்ணா (43).

ஜன.28: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன்.

ஜன.31: சென்னையில் நடந்த, 'யூத் கேலோ' இந்தியா விளையாட்டில் தமிழகம் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலத்துடன் 2வது இடம் பிடித்தது.

பிப்.10,11: சென்னை, சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன். ஒற்றையரில் இந்தியாவின் சுமித் நாகல் சாம்பியன்.

பிப்.18: மலேசியாவில் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து தலைமையிலான இந்திய பெண்கள் அணி சாம்பியன்.

மார்ச்9: இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் அரங்கில் 700 விக்கெட் சாய்த்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

மே30: சென்னையில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ்-2 தடகளத்தில் தமிழகத்தின் வித்யா 2 தங்கம் (400 மீ., 400 மீ., தடை ஓட்டம்) வென்றார்.

ஜூன்6: சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து இந்தியாவின் சுனில் செத்ரி ஓய்வு (151 போட்டி, 94 கோல்).

ஜூன்8,9: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் போலந்தின் ஸ்வியாடெக், ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன்.

ஜூன்29: பெண்கள் டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் (603, எதிர்: தென் ஆப்ரிக்கா, இடம்: சென்னை) குவித்து இந்தியா சாதனை.

ஜூலை13,14: விம்பிள்டன் டென்னிசில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா, ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன்.

ஜூலை26: பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடந்தது.

ஜூலை29: சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார் இந்தியாவின் போபண்ணா 44.

ஜூலை30: ஒலிம்பிக் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர்-சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றனர்.

ஆக.10: மல்யுத்தத்தில், இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார்.

ஆக.11: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கம் மட்டும் வென்று இந்தியா 71வது இடம்.

ஆக.28: பாரிசில் பாராலிம்பிக் போட்டி ஆக. 28-செப். 8ல் நடந்தது.

ஆக.30: பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் (10 மீ., ஏர் ரைபிள்) 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார் அவனி.

செப்.2: பாராலிம்பிக் பாட்மின்டனில் நிதேஷ் குமார் (தங்கம்), சுஹாஸ் (வெள்ளி), ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் (தங்கம்) அசத்தினர்.

*பாட்மின்டனில் தமிழக வீராங்கனைகள் துளசிமதி (வெள்ளி), மணிஷா, நித்ய ஸ்ரீ (வெண்கலம்) வென்றனர்.

செப்.4: பாராலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஹர்விந்தர் சிங்.

செப்.8: பாரிஸ் பாராலிம்பிக்கில் 29 பதக்கம் (7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம்) வென்ற இந்தியா, பட்டியலில் 18வது இடம் பிடித்தது. சீனா (220) முதலிடம்.

செப்.13: சென்னையில் நடந்த தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் இந்தியா சாம்பியன் (48 பதக்கம்).

செப்.17: சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன். பைனலில் சீனாவை வென்றது.

அக்.1: ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் 'ரைபிள் 3 பொசிஷன்ஸ்' பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஸ்வப்னில்.

அக்.7: ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு.

நவ.11: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன். சாலஞ்சர் பிரிவில் இந்தியாவின் பிரனவ், முதலிடம்.

நவ.23: 'டி--20' கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' சதம் அடித்த முதல் வீரர் ஆனார் இந்தியாவின் திலக் வர்மா. தென் ஆப்ரிக்கா (107, 120), மேகாலயா (151) அணிக்கு எதிராக சதம் விளாசினார்.

டிச.1: ஐ.சி.சி., தலைவரானார் இந்தியாவின் ஜெய் ஷா.

டிச.11: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் சவுதி அரேபியாவில் (2034) நடக்க உள்ளது.

டிச.18: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ஓய்வு. 106 டெஸ்டில், 537 விக்கெட் சாய்த்துள்ளார்.

டிச.23: பாட்மின்டன் வீராங்கனை சிந்து-வெங்கட தத்தா சாய் திருமணம் ராஜஸ்தானில் நடந்தது.

டிச.29: உலக 'ரேபிட்' செஸ் தொடரில் இந்தியாவின் ஹம்பி சாம்பியன்.

டிச.30: மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

மின்னிய மனு

ஜூலை28: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மனு பாகர். 10 மீ., ஏர்பிஸ்டல் பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார்.

ஷீத்தல் கலக்கல்

செப்.2: பாரிஸ் பாராலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஷீத்தல் தேவி ஜோடி வெண்கலம்.

18...18

டிச.13: சிங்கப்பூரில் 18வது உலக செஸ் போட்டி நடந்தது. இந்தியாவின் குகேஷ் 18, டிங் லிரெனை (சீனா) வீழ்த்தி, உலகின் இளம் சாம்பியன் ஆனார்.

வீணான வாய்ப்பு

ஆக.8: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன், எடை 100 கிராம் கூடியதால் இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம். ஹரியானா தேர்தலில் வென்று காங்., எம்.எல்.ஏ., ஆனார்.

'ஸ்டிரீட்' கார் ரேஸ்

செப்.1: தெற்காசியாவில் முதன் முறையாக இரவு நேர ஸ்டிரீட் 'பார்முலா - 4' கார் பந்தயம் மின்னொளியில் சென்னையில் நடந்தது.

டாப் - 3

ஆக. 26: போலந்து, டைமண்ட் லீக் தடகளம், 'போல் வால்ட்' போட்டியில் சுவீடன் வீரர் டுப்ளான்டிஸ் (6.26 மீ.,) உலக சாதனை.

செப். 2: பெங்களூரு, தேசிய தடகளம் 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா (56.23 வினாடி) தங்கம். பி.டி.உஷாவின் (56.30) சாதனையை தகர்த்தார்.

நவ. 20: டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்பெயினின் நடால். களிமண் கள நாயகனான இவர், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.






      Dinamalar
      Follow us