/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தென் மாநிலத்தின் ஒரே பனி சூழும் இடம்!
/
தென் மாநிலத்தின் ஒரே பனி சூழும் இடம்!
PUBLISHED ON : ஜன 19, 2025

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீத்தாராமராஜூ மாவட்டத்தில், சிந்தப்பள்ளி மண்டலத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது, லம்பசிங்கி என்ற கிராமம். குளிர்ந்த வானிலை மற்றும் மூடு பனிகளுக்கு புகழ்பெற்ற ஊர், இது.
இதை, ஆந்திரபிரதேசத்தின், காஷ்மீர் என்கின்றனர். குளிர்காலத்தில் உறைபனியை காணக் கூடிய, ஒரே தென் மாநில ஊர்.
செழிப்பான காடுகள், மலைகள் மற்றும் காபி தோட்டங்கள் நிறைந்துள்ளன. பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை புகைப்படக்காரர்கள் இங்கு குவிகின்றனர். வெப்பம் சில சமயம் பூஜ்யத்துக்கும் குறைந்து, பனி கொட்டும் அருமையான காட்சியை படம் பிடித்து செல்கின்றனர்.
குளிர்காலத்தில் பனிப்பொழிவை தொடர்ந்து காணலாம். டிசம்பர்- முதல் பிப்ரவரி வரை பருவ காலம். காலை, மாலை குளிருடன், சூரிய உதயம், சூரியன் மறைவு பார்க்க ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
ஜோல்னாபையன்